சமுர்த்தி மிதுறு கடன் மூன்று மணிநேரத்தில் உங்கள் கைகளில்......
சமுர்த்தி திணைக்களம் புதியதொரு கடன் திட்டத்தை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது. சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஊடாக மிதுறு கடன் எனும் பெயரில் இக்கடன் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இக்கடனை விண்ணப்பித்து மூன்று மணிநேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
மிதுறு கடன் திட்டமானது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியின் அங்கத்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் இக்கடன் வியாபார நடவடிக்கைகளுக்காக 20,000 ரூபாவும், அவசர நிதித் தேவைக்காக 10,000 ரூபாவையும் வழங்கப்படவுள்ளது, இக்கடனை ஆக கூடியது ஒரு மாத காலத்தில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். கடனை தங்கள் விருப்பத்திற்கேற்ப 10 நாட்கள், 20 நாட்கள், 30 நாட்கள் என செலுத்தும் காலங்களை கடன் பெறுபவர் தெரிவு செய்து கொண்டால் பின்வரும் வட்டி வீதத்தில் கடன் அறிவிடப்படும். 1 தொடக்கம் 10 நாட்களுக்கு 1%, 11 தொடக்கம் 20 நாட்களுக்கு 2%, 21 தொடக்கம் 30 நாட்களுக்கு 3% அறிவிடப்படும். இக்கடனுக்கு எதுவித பிணையும் வழங்கப்பட தேவையில்லை எனவே மிதுறு கடன் தேவைப்படுவோர் உங்கள் கிராம சமுர்த்தி உத்தியோகத்தருடன் தொடர்பை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
Comments
Post a Comment