மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு பிரியாவிடை நிகழ்வு.....

 மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு பிரியாவிடை நிகழ்வு.....



மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 தொடக்கம் 2022.01.23 வரை மாவட்ட சமுர்த்தி பிரிவில்  மாவட்ட பணிப்பாளராக கடமையாற்றி 2022.01.24 தொடக்கம் இலங்கை சமுர்த்தி திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயமாக  பதவி உயர்வு பெற்றுச் செல்லும் திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட சமுர்த்தி பிரிவின் கணக்காளர் பஸீர் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் 21.01.2022 அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளராக நேர்மையாகவும், பணி நேர்த்தியாகவும், யாருக்கும் அடி பணியாமலும், திடமான சேவையை வழங்கிய திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவின் உத்தியோகத்தர்கள் சமுர்த்தி பிரிவின் கணக்காளர் பஸீர் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் 21.01.2022 அன்று நடாத்தியது. இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் K.கருணாகரன் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டி நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர் தாம் மாவட்ட அரச அதிபராக கடமையேற்ற போது சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கும் வேலைத்திட்டம் நடைபெற்றதாகவும்  இதை விரைவாக செய்து முடிக்க தான் பணித்த போது மிக விரைவாக இப்பணிகளை முடித்த ஒரு சிறந்த சேவையாளராகவும், தம் சேவையை திறம்படவும், நேர்த்தியாகவும் செய்வதில் தலை சிறந்தவர் என்றும், தாம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது அமிர்தகலா பாக்கியராஜா அவர்கள் உதவி திட்டமிடல் பணிப்பாளராக முதல் தடவையா கடமையாற்ற வந்ததாகவும் நினைவு கூறினார்.

 இதன் போது மாவட்ட சமுர்த்தி பிரிவின் நிர்வாக பிரிவு, கணக்குப்பிரிவு, கருத்திட்ட பிரிவு, வங்கிப்பிரிவு, கணக்காய்வு பிரிவு, சமூக அபிவிருத்தி பிரிவு, ஓய்வூதிய பிரிவு, சமுதாய அடிப்படை பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவனரால் தங்கள் பணிப்பாளரின் சேவை பற்றி சிறப்புரையும், வாழ்த்து கவிதைகளும், சினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 இந்நிகழ்வில் உரையாற்றிய விழா நாயகி அவர்கள் தான் கடமை நேரத்தில் சற்று கண்டிப்புடன் சேவையாற்றியதாகவும் குறிப்பிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி பிரிவு சிறப்பாக இருப்பதாக தன்னிடம் பலரும் கூறும் போது சந்தோசம் அடைவதாகவும் தான் தற்போதும் சமுர்த்தி பிரிவிற்கே பதவி உயர்வு பெற்றுச் செல்வதால் என்னால் முடிந்த வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

































Comments