ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை நிர்வாகம் தெரிவு...
சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் வருடந்தோறும் தங்கள் நிர்வாக தெரிவுகளை மீள் புதுப்பித்தல் செய்து புதிய பதிவுகளை மேற்கொள்ளும். அந்த வகையில் ஆரையம்பதி சமுர்த்தி வங்கியானது 2022ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவை அன்மையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.க.புவனேந்திரன் தலைமையில் நடாத்தி இருந்தது.
இந்நிகழ்வை ஆரையம்பதி சமுர்த்தி வலய சமுதாய அடிப்படை அமைப்பிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் உனேஸ் குணபாலன் அவர்களின ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரையம்பதி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.நவரஞ்சன் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் கணக்காய்வு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது 2021ம் ஆண்டில் சிறப்பான முறையில் தங்கள் சமுர்த்தி சமுதய அடிப்படை அமைப்புக்களின் அலுவலகங்களை திறந்தவர்கள், கணக்கறிக்கைகளை ஒழுங்காக பேணியவர்கள் மற்றும் ஆவணங்களை வகைப்படுத்திய சிறந்த மூன்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் கௌரவிக்கப்பட்டன. ஆரையம்பதி சமுர்த்தி வங்கியில் மொத்தம் 46 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment