ஆதங்க பதிவு........
வாழ்த்துக்கள் கிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு!
கிழக்கு மாகானத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 வீரர்களில் தமிழ் பேசும் வீரர்களும் தமிழர்களின் பிரதிநித்துவம் இல்லாது தான் எனது ஆதங்கம். 1970, 1980 களில் மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் உதைப்பந்தாட்டத்தில் முன்னணி மாவட்டமாக இருந்தது. 1982இல் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றும் 1986இல் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றதை மறக்க முடியாது. இந்த அணிகளில் விளையாடியவர்கள் பாடும்மீன் விளையாட்டு கழகம், மைக்கேல்மென் விளையாட்டு கழகம், B.R.C.விளையாட்டு கழகம், சிவாநந்தியன் விளையாட்டு கழகத்தை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்
35-40 வருடங்களில் பல மாற்றங்கள் இடம்பெற்றதால் இன்று கிழக்கு மாகாண அணியில் மட்டகளப்பில் முன்னணி வகிக்கும் கழகங்களில் இருந்து வீரர்கள் தெரிவு செய்யபடாதது கேள்விகுறியாக உள்ளது. ஏன் தமிழ் கழகங்களில் திறமையான வீரர்கள் இல்லையா? அல்லது இந்த 30 வீரர்களும் அந்த கழகங்களின் வீரர்களை விட திறமை படைத்தவர்களா? இந்த கேள்விக்கு பதில் கிடைத்தால் அடுத்து நாம் என்ன செய்யலாம் என்று முடிவு எடுக்கலாம்.
என்னை போல் பல புலம்பெயந்தவர்கள் இப்படியான விடயங்களில் தலையிடும் போது வில்லன்களாக சித்தரிக்கப்படுவது கவலைக்குறிய விடயம். விளையாட்டில் எமது பிரதிநித்துவம் பறிக்கபடுவதை எம்மால் நிறுத்த முடியும் என்று நான் நம்புகின்றேன்.
27.01.2022 அன்று காலை முகநூலை பார்த்த போது கிழக்கு மாகான அணியில் தமிழ் பேசும் வீரர்களும் தமிழர்களின் பிரதிநித்துவம் இல்லாது பற்றி Tommy Ganeshamoorthy அவர்கள் தெரிவித்த கருத்து என்னை பாதித்தது இதனால் அவர் பதிவிட்டதை மேலே பதிவிட்டுள்ளேன். உதைபந்தாட்டம் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டும் அப்படித்தான் உள்ளது நிச்சயம் மாற்றம் வேண்டும் மாற்றம் ஒன்றே மாறாதது.......
Comments
Post a Comment