மட்டு மாவட்டத்தில் முதல் சமுர்த்தி வங்கிக்கான காணி உறுதிப்பத்திரம் கையளிக்கப்பட்டது......

 மட்டு மாவட்டத்தில் முதல் சமுர்த்தி வங்கிக்கான காணி உறுதிப்பத்திரம்  கையளிக்கப்பட்டது......



சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 26 வருடங்கள் கடந்துள்ள நிலையில்  சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லாறு சமுர்த்தி வங்கிக்கான காணி உறுதிப்பத்திரம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களால் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 31 சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கும் சமுர்த்தி வங்கிகளை சமுர்த்தி திணைக்களத்தின ஊடாக உரிய சமுர்த்தி வங்கிகளுக்கு இவ்வுறுதிப்பத்திரம் எழுதப்பட்டு உரிய வங்கிகளிடம் கையளிக்கும் நிகழ்வு 04.01.2022 அன்று நடைபெற்றது

04.01.2022 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக  கல்லாறு  சமுர்த்தி வங்கிக்கான காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களிடம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களால் காணிப்பத்திரம் கையளிக்கப்பட்டது இதன் போது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரனிதரன்  அவர்களும் கலந்து சிறப்பித்தார்.


Comments