நானும் என் சமுர்த்தியும் 99ம் தொடர்.....

 நானும் என் சமுர்த்தியும் 99ம் தொடர்.....

நாடுபூராவும் திவிநெகும திணைக்களம் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வந்தன இதன் அடிப்படையில்  மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திலும் திவிநெகும திணைக்களம் பற்றிய தெளிவூட்டம்  வேலைத்திட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் T.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் 2012.10.10ம் திகதி அன்று  காலை 8.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை   மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலக  பிரிவிலுள்ள 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி சிறுகுழுக்களின் தலைவர்கள், சமுர்த்தி சங்கங்களின் தலைவர்கள், சமுர்த்தி வங்கிச்சங்க கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர்கள் மற்றும் சமுர்த்தி நிறைவேற்றுக் குழுத் தலைவர்களுக்கு முதற்கட்டமாக விழிப்பூட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

இவ் விழிப்பூட்டும் செயற்பாட்டிற்கு   சமுர்த்தி அதிகாரசபையின் வாழ்வாதாரப் பிரிவுப் பணிப்பாளர் M.நடேசராஜா அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும், அம்பாரை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர்  I.அலியார் அவர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இவ் விழிப்பூட்டும் பட்டறையில் திவிநெகும திணக்களத்தினால் மக்களுக்கு கிடைக்கும்  நன்மைகள், மக்களுக்கான பாதுகாப்புக்கள், கிராமங்களின் அபிவிருத்திவேலைகள் மற்றும் இத் திணக்களத்தின் பணிகள், அதிகாரங்கள், குறிக்கோள்கள் அத்துடன்   திவிநெகும சட்டமூலத்தின் பிரதான உள்ளடக்கம்,  திவிநெகும சமுதாய வங்கிகளின் நடவடிக்கைகள்  போன்ற விடயங்கள் பற்றியும் விரிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடரும்.....


















Comments