நானும் என் சமுர்த்தியும் 97ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 97ம் தொடர்.......



5ம் ஆண்டு புலமை பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது எனது கிராம சமுர்த்தி தாய் சங்க ஒன்றியம் என்னையை அனுகி தாம் புலமைப்பரீட்சைக்கான இலவச கருத்தரங்கை நடத்த அனுமதி கோரி இருந்தனர். நானும் அனுமதித்தேன்.

சமுர்த்தி திட்டம் வறிய மக்களை மேம்படுத்தும் திட்டமாகும் இதில் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்களை செய்வதே இதன் ஒரு பாரிய பணியாகும். ஆனால் இவ்வேலைத்திட்டங்கள் பலவற்றை இக்கல்லடிவேலூர் கிராம சமுர்த்தி சங்கங்கள் சிறப்பாக செய்து வருவதை நாம் பல தடவை இச்செய்திகள் வாயிலாக அறிந்துள்ளோம். தற்போதைய காலங்களில் 5ம் ஆண்டு புலமை பரீட்சைக்கான கருத்தரங்கை நடாத்த ஒரு மாணவருக்கு 1000 தொடக்கம் 150 வரை கட்டணமாக பெற்று சனி, ஞாயிறு தினங்களில் இவ்வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.  இக்கால கட்டத்தில் தங்கள் கிராமத்தில் பணம் கொடுத்து கருத்தரங்குகள் செல்ல முடியாத மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு ஒன்றை மட்டக்களப்பு செலிங்கோ நிறுவனத்தின் அனுசரனையுடன் கல்லடிவேலூர் சமுர்த்தி சங்கள் 15.08.2012 மற்றும் 16.08.2012 ஆகிய இரு தினங்களில் கல்லடிவேலூர் சிறி சக்தி வித்தியாலளத்தில் நடாத்தியது. இதில் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

                           இந்நிகழ்வில ஆரம்ப நாளில்  நாவற்குடா சின்ன லூர்து ஆலய பங்குத்தந்தை வண பிதா X.I ரஜீவன் அடிகளார் அவர்களும், கல்வித்திணைக்கள ஆரம்பகல்வி  சேவைக்கால ஆலோசகர் திருமதி அருளம்பலம் அவர்களும், மட்டக்களப்பு செலிங்கோ லைவ் முகாமையாளர் அ.சாந்தகுமார் அவர்களும், கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும்,  சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்சோதி அவர்களும், வளவாளர்களான திரு.ஞானரெட்ணம் ஆசிரியர் அவர்களும், திருமதி.பாலேந்திரா  ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட வணபிதா உரையாற்றுகையில் இக்கால கட்டத்தில் இப்படியான நல்ல செயற்பாடுகளை செய்யும் இச்சமுர்த்தி சங்கத்தினை பாராட்டியதுடன், இச்சிறுவர்கள் 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் அளிக்கும் விடைகளுக்கு தன்னால் பதில் அழிக்க முடியாது என வியப்புடன் கூறினார். அதைத்தொடர்ந்து உரையாற்றிய செலிங்கோ லைவ் முகாமையாளர் அவர்கள் தாங்கள் இவ்வருடத்துடன் மூன்றாவது வருடாக இச்சிறப்பான சேவையை செய்து வருவதாகவும் இதற்காக தினமும் தங்களிடம் இக்கிராம உத்தியோகத்தர் வந்து போவதையும் குறிப்பிட்டு, இம்மாணவர்கள் சித்தியடைந்தால் இவர்களை  கௌரவிப்பதிலும் தங்கள் நிறுவனம் பின் நிற்கப்போவதில்லை என குறிப்பிட்டார். அதை தொடர்ந்து உரையாற்றிய கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் கல்லடிவேலூர் கிராமத்தை போல் தான் ஒரு கிராமத்தையும் இது வரை கண்டதில்லை என்றும் இக்கிராமம் தான் சமுர்த்தி திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல விடயங்களையும் செயற்படுத்தும் ஒரு கிராமம் என கூறியதுடன் இம்மாணவர்கள் சித்தியடைந்தால் தான் ஒவ்வொரு மாணவருக்கும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக நிதி பெற்றுத்தருவதானவும் கூறினார். இதை தொடர்ந்து உரையாற்றிய அதிபர் சமுர்த்தி மூலம் தன் பாடசாலை மாணவர்களுக்கு இச்சந்தர்பத்தை வழங்கிய இக்கிராம உத்தியோகத்தரை பாராட்டினார் இவ்வுத்தியோகத்தர் இக்கிராமத்தை கடமையேற்று மூன்று வருடத்திலும் மூன்று வகுப்புக்களை தந்ததை பாராட்டினார். இரன்டு நாள் முடிவிலும் பரீட்சிக்கப்பட்ட பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

தொடரும்.......

















Comments