நானும் என் சமுர்த்தியும் 96ம் தொடர்.......
சமுர்த்தி திட்டத்தில் வறிய மக்களை அவர்களின் சுயமுயற்சியின் மூலம் மேம்படுத்தி ஒரு திடமான வாழ்வை கொண்டு செல்ல வாழ்வாதார உதவிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டே வந்தன.
அரசாங்கம் மாத்திரம் தான் இச்செயற்பாட்டை நடாத்துவதா நாமும் இதை செயற்படுத்துவோம் என கருதி கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்க ஒன்றியம் ஒரு பயிற்சி நெறியை முதலில் கல்லடிவேலூர் மக்களுக்கு செயற்படுத்த தொடங்கியது. இவ்விடத்தை கருத்தில் கொண்ட கல்லடிவேலூர் சமுத்த்தி தாய்சங்க ஒன்றியம் கல்லடிவேலூர் சமுர்த்தி சங்கங்களும் இனைந்து பெண்களுக்கான ஒரு நாள் சுயதொழல் பயிற்சி பட்டறையை 21.07.2012 சனிக்கிழமை ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் நடாத்தியது. இதன் போது கல்லடி வேலூர் கிராமத்தில் சமுர்த்தி சங்கத்தில் இருந்து சுமார் 30 பெண்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களுக்கு மெழுகுதிரி உற்பத்தி செய்வது பற்றியும் அதை எப்படி விற்பனை செய்வது என்பது பற்றி கலந்துரையாடலும், பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியை கல்லடிவேலூர் கிராம மாதர் சங்க தலைவியும் காயத்திரி சமுர்த்தி சங்க தலைவியுமான சௌந்தரராணி சுகுமாரன் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடத்தி இருந்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனாகிதராஜ், ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்சோதி, கல்லடிவேலூர் கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் B.ஜெயதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கான மெழுகுதிரி செய்யும் இயந்திரம் கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியத்தால் வழங்கப்படுவதுடன் அவர்கள் தினமும் தங்களால் செய்யப்படும் மெழுகுதிரிகளுக்கு கூலி வழங்கப்படும் எனவும் சமுர்த்தி உத்தியோகத்தர் தெரிவித்தார். இதை ஒருவர் நாளாந்தம் பகுதி நேரத்தொழிலாக செய்ய முடியும் எனவே ஒருவர் தாராளமாக ஒரு நாளைக்கு குறைந்தது 100 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் எனவும் கூறினார்.
Comments
Post a Comment