நானும் என் சமுர்த்தியும் 95ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 95ம் தொடர்.......

சகல சிறுவரினதும் உரிமைகளை உறுதிப்படுத்தல் எதிர்காலத்தினை பொறுப் பேற்கவுள்ள சிறுவர்களது உலகினை பட்டை தீட்டுவதற்கும் அவர்களது திறமைகளை விருத்தி செய்து, உடல், உள மற்றும் ஆத்மீக அபிவிருத்தியினை ஏற்படுத்தி எதிர்காலத்தின் பொருட்டு தற்போதுள்ள சிறுவர்களை பயிற்றுவிப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் குறிக்கோளாகும். இதுவரையில் 13700 மட்டளவிலான செயற்பாடுள்ள சிறுவர் கழகங்கள் சமுர்த்தி திட்டத்தில்  செயற்படுவதுடன் 300000 அண்மிய அங்கத்தவர்களையும் இனைத்துக் கொண்டுள்ளது. இச்சிறுவர் கழக பிள்ளைகளின் கலாசார மற்றும் இலக்கிய ஆற்றல்களை மெருகூட்டுவதும் மற்றும் அவ்வாற்றல்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு வரும் பொருட்டு பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்திலான போட்டிகள் நடாத்தப்பட்டது.



எனவே சமுர்த்தி திட்டத்தில் சிறுவர்களை இணைப்பது மிக முக்கியமானதொரு செயற்பாடாக இருந்து வந்துள்ளது. கிராமம் தோறும் சமுர்த்தி சிறுவர் கழகங்கள் உருவாக்குதல். இக்கழகங்களை வருடா வருடம் புதுப்பித்து தங்களிடையே தலைமைப் பொறுப்பை ஏற்படுத்தி கொடுப்பதாகும். இதற்கு ஒரு ஊந்து சக்தியாக வருடம் தோறும் சிறுவர் கலாச்சார போட்டிகளை சமுர்த்தி அதிகார சபை நடாத்தி இதில் வெற்றியீட்டும் சிறூர்களை கௌரவித்தும் வந்ததை நீங்கள் அறிவீர்கள். இச் செயற்பாடு 2012ம் ஆண்டும் நடைபெற்றது. முதலில் கிராம மட்டத்தில் நடைபெற்று அடுத்தாக வலய மட்டத்தில் இடம் பெற்றது. கல்லடி வேலூர் கிராமத்தை பொறுத்த மட்டில் 2012ம் ஆண்டு சிறந்த ஆண்டாகவே காணப்பட்டது வலய மட்டத்தில் பல போட்டிகளில் கல்லடிவேலூர் சிறார்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டி மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகி இருந்தனர்.

கல்லடி சமுர்த்தி வலயத்திற்கான சிறுவர் போட்டிகள் K.தங்கத்துரை அவர்களின் தலைமையில் வலய உதவியாளர் K.குமணன் அவர்களின் ஏற்பாட்டில் கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் கல்லடி வேலூர் கிராமம் வெற்றி பெற்று மாவட்ட மட்ட போட்டிகளுக்கு தெரிவாகி இருந்தது.

மாவட்ட மட்ட போட்டிகளுக்கு சிறுவர் குழு நடனமும் நாட்டிய நாடகம் தெரிவாகி இருந்தது. இந்த மாவட்ட மட்ட போட்டிகள் மட்டக்களப்பு மஹாஜனா கல்லூரியில் மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் கல்லடி வேலூர் கிராமம் சார்பாக கலந்து கொண்ட  சிறுவர் குழு நடனம் மற்றும் நாட்டிய நாடகம் மாவட்ட மட்டத்தில் தெரிவாகி தேசிய மட்டத்திற்கு செல்ல தயாரானது.

2012ம் ஆண்டின் தேசிய மட்டத்திலான போட்டிகள் 2012 ஒக்டோபர் 20, 21ம் திகதிகளில் எம்பிலிபிட்டிய கிராமிய தலைவர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. அதில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் சிங்கள மற்றும் தமிழ்மொழி மூல சிறுவர் கழக பிள்ளைகள் 15 போட்டிகளில் 3 வயதெல்லைகளில் போட்டிகளில் கலந்து கொண்டனர்.  2012ம் ஆண்டில் தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற கெக்குலு சிறுவர் கழக பிள்ளைகளுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கும் வைபவம் கம்பஹா சந்திரஜோதி வித்தியாலயத்தில் 2012ம் ஆண்டு டிசம்பர் 01ம் திகதி நடாத்தப்பட்டது. இந்த அகில இலங்கை ரீதியான போட்டித் தொடரில் வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு தனிநபர் போட்டி நிகழ்ச்சிகளின் பொருட்டு, முதலாவது - ரூ.5,000 ரூபாவும், இரண்டாவது ரூ.3,000 ரூபாவும், மூன்றாவது - ரூ.2,000 ரூபாய் வீதமும் குழு  நிகழ்ச்சிகளின் பொருட்டு, முதலாவது - ரூ.20,000 ரூபாவும், இரண்டாவது - ரூ.15,000 ரூபாவும், மூன்றாவது - ரூ.10,000 ரூபாய் வீதம் அப்பிள்ளைகளின் சமுர்த்தி வங்கிகளில் சிசுரக்க மற்றும் சிறுவர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனுடாக சிறுவர்களின் சேமிப்பு மேம்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கல்லடிவேலூர் கிராமம் குழு நடனம் முதலாமிடத்தையும், நாட்டிய நாடகம் இரண்டாமிடத்தை பெற்று எனக்கு பெருமையை தேடித்தந்தது.

தொடரும்....













Comments