25 வருட சமுர்த்தி உத்தியோகத்தர் சங்க மகாநாடு மட்டுநகரில்......
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தாங்கள் கடமையை ஏற்று 25 வருட பூர்த்தியை மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் 11.01.2022 அன்று மாவட்ட தலைவர் ந.ரவீந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடாத்தியது.
இநநிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் கௌரவ செயலாளருமான ஜகத் குமார ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய கொழும்பு பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் கௌரவ செயலாளருமான ஜகத் குமார அவர்கள் சமுர்த்தி திட்டம் 1995ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் 1997ம் ஆண்டு தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களாக 1950 ரூபாய் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார். அக்கால கட்டத்திலேயே அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் உருவாக்கப்பட்டதாகவும் தான் 25 வருடங்களாக செயலாளர் பதவியை வகித்த வருவதாகவும் குறிப்பிட்ட அவர் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைளை தாம் அறிவதாகவும் இதை மாவட்ட அரச அதிபரிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் மிக விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சமுர்த்தி உத்தியோகத்தர் நலன்புரி கூட்டுறவு சங்கம் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கில் கொள்வணவு செய்ய இலகு தவணையில் 50 பேருக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் வழங்கவுள்ள தேவைப்படுவோர் விண்ணப்பிக்குமாறும் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இன்று 61 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தரம்-01 நியமனம் வழங்கப்படுவதாகவும் மிக விரைவில் மிகுதியானவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்
நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2022ம் ஆண்டில் மூன்று சமுர்த்தி வங்கிகள் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டியுள்ளதாக தாம் அறிந்துள்ளதாகவும் எனவே உங்களின் சேவை இனிவரும் காலங்களிலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் K.கருணாகரன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் எம்.எஸ்.பஸீர் அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் Vவாசுதேவன் அவர்களும், அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாலர் அத்துடன் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு நினைவுச்சின்ன வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னடை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment