மட்டு மாவட்டத்தில் மாவடி வேம்பு சமுர்த்தி வங்கி 2021 அதிகூடிய இலாபம் பெற்ற வங்கி.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021ம் ஆண்டு அதி கூடிய இலாபம் உழைத்த சமுர்த்தி வங்கியாக செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி ரூபா 15,195,606.32 சதங்களை இலாபமாக பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2021ம் ஆண்டில் 29 சமுர்த்தி வங்கிகள் இயங்குவதாகவும் இதில் மூன்று சமுர்த்தி வங்கிகள் ஒரு கோடி ரூபாக்களுக்கு மேல் 2021ல் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் இதில் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி 15,195,606.32 இலாபமாக பெற்று முதலாமிடத்தையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எருவில் சமுர்த்தி வங்கி 12,911,022.53 இலாபமாக பெற்று இரண்டாமிடத்தையும் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி 11,786,060.81 இலாபத்தை பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
2021ம் ஆண்டில் கொரான தொற்று காரணமாக கடன் அறவீடுகளில் பல சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தாலும் இம் மூன்று வங்கிகளும் ஒரு கோடி ரூபாக்களுக்கு மேல் இலாபமீட்டியுள்ளதை பாராட்டியே ஆக வேண்டும் எனவே இலாப மீட்டிய அனைத்து வங்கிகளிலும் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி பணியாளர்கள், சமுர்த்தி கள உத்தியோகத்தர்களுக்கு தம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment