சுவாமி விவேகானந்தரின் 160வது ஜனன தின விழா......
புதுக்குடியிருப்பு சமூக நலன்புரி அமைப்பால் சுவாமி விவேகானந்தரின் 160வது ஜனன தினம் தலைவி திருமதி.தயனி கிருஸ்ணாகரன் தலைமையில் கிரான்குளம் சீமூன் காடின் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைகழகத்தின் உபவேந்தர் பேராசிரியர்.வ.கனகசிங்கம் அவர்கள் கானொளி மூலம் கலந்து கொண்டு கலந்துரையாடினார். மற்றும் கௌரவ அதிதியாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சி.புவனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் கல்லடி இராமகிருஸ்ண மிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தசாஜானந்தாஜீ மகராஜ் அவர்களும், கல்லடி இராமகிருஸ்ண மிசன் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவனந்தாஜீ மகராஜ் அவர்களும் ஆத்மீக அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், வலது குறைந்தமவர்களுக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளை கௌரவப்படுத்தி நினைவு சின்னங்களும் பொன்னாடையும் அணிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment