அறிந்ததும் அறியாததும் பாகம் (07)........ முடங்கிய மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம்......

 அறிந்ததும் அறியாததும் பாகம் (07)........

முடங்கிய மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம்......



     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSVயின்  பங்களிப்பு.....  

வெற்றிகரமாக பல எதிர்ப்புக்களின் மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் இந்த பயிற்சி முகாமை நடாத்தி வெற்றி கண்டிருந்த போதிலும் இச்சங்கத்தில் இயங்கிய அனைவரும் தொண்டர் சேவையில் பணி புரிந்ததால் இவ்வெதிர்ப்பு படலத்தை கண்டு மனம் தளர்ந்தவர்களாவே காணப்படதாக இவ்வமைப்பில் இயங்கிய சிலர் என்னிடம் கூறி இருந்தனர்.

2018 ஜனவரி மாதத்துடன் அஸ்தமித்த ஒரு சங்கமாகவே இது காணப்பட்டது. இதை மீண்டும் இயக்குவதற்காக 2020ம் ஆண்டு மீண்டும் சதாசிவம் சசிதரன் அவர்களின் வழி காட்டலில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போது இதில் புனித மிக்கல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா அவர்களும், மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் திரு.பாஸ்கரன் அவர்களும், புனித மக்கல் கல்லூரி உடல்கல்வி ஆசிரியர், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் அவர்களும் இணைந்து கொண்ட போதிலும் கொவிட் காரணமாக மீண்டும் தடைப்பட்டது.

இச்சங்கத்தில் செயற்பட்ட சிலரிடம் நான் கலந்தரையாடிய போது மிகவும் சிறப்பாகவே இச்சங்கம் செயற்பட்டதாகவும் 2017.11.12 ஆரம்பிக்கப்பட்டு ஒரு பாடசாலை அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டி மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியினருக்கான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் என இச்சங்கம் 2018.01.20 வரை இரண்டு நிகழ்வுகளை நடாத்தியதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் 69 நாட்களில் அஸ்தமித்து போனது தங்களுக்கு கவலை தருவதாக இருப்பதாகவும் மற்றைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் வயதிற்குட்பட்டோருக்கான  பிரிவுக்கான  (Division) போட்டிகளில் பல முன்னேற்றத்தை கண்டு செல்வதை பார்க்கும் போது தமக்கு கவலை தருவதாகவும் குறிப்பிட்டனர்.

 மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் பற்றி பலம் அறியாமல் இருந்துள்ளனர், சிலர் அறிந்தும் உள்ளனர். ஏன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்த பின்னடைவு இதற்கு காரணம் என்ன? இதற்கு பொறுப்பு கூறுவது யார்? இப்படி பல கேள்விகளை நாம் கேட்கலாம். மற்றை மாவட்ட பாடசாலைகள் வெற்றிகரமாக தங்கள் பயணத்தில் பயணிக்கும் போது ஏன் எம்மால் பயணிக்க முடியாதுள்ளது. தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தை பார்க்கும் போது யாழ் பாடசாலைகள் கிரிக்கெட் போட்டிகளில் (Division II)    போட்டிகளில்  பங்கு பற்றும் பாடசாலைகளாக முன்னேற்றங்களை கண்ட பாடசாலைகளாக காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை மீண்டும் புத்துயிர் கொடுத்து செயற்படுத்த முடியாதா? என நாம் கேட்கின்றோம். இதைத்தான் இலங்கை கிரிக்கெட் சங்கமும் கூறி வருகின்றது பாடசாலை கிரிக்கெட்டை வளர்த்தெடுத்தால் நல்ல வீரர்களை உருவாக்க முடியும் என கூறி வருகின்றது.

 இந்த மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் செயற்படாமல் தூர்ந்து போனதால் ஒரு மாற்று செயற்பாட்டை செயற்படுத்த கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமும் முன்வந்தது அதைப்பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்....

தொடர் தொடரும்.......




Comments