அறிந்ததும் அறியாததும் பாகம் (06)........ மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் முகாம்....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (06)........

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் முகாம்....



     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSV மற்றும்  KSC யின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கிரிக்கெட்டின்  தரத்தை உயர்த்தி  தேசிய மட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவோம்  என பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளர் K.ஜெயராஜ் தெரிவித்தார்.

    மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கமும் பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனமும் இணைந்து நடாத்திய மட்டக்களப்பு பாடசாலைகளுக்கான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்குரிய பயிற்சி முகாமை 2018.01.03ம் திகதி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி  மைதானத்தில் ஆரம்பித்து வைத்த போதே மேற்கண்டவாறு கூறியனார். இவர் மேலும் கூறுகையில்  தங்கள்  சம்மேளனம் 2005ம் ஆண்டு இங்கிலாந்தில்  ஆரம்பிக்கப்பட்டதாகவும் 2017ல் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதாகவும். இவ்வமைப்பு முதற்கட்டமாக பாடசாலையில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க பயிற்றுவிப்பாளர்களுக்கான முதல் கட்ட  பயிற்ச்சியை இன்று ஆரம்பிப்பதாக கூறினார்.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு.விமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இதன் போது  உரையாற்றுகையில் தற்போதைய காலங்களில் பாடசாலைகளில் கிரிக்கெட் பயிற்றுவிக்கும் பயிற்ச்சியாளர் இல்லாதது பெரும் குறைபாடாவே காணப்படுகின்றது. இதை நிவர்த்தி செய்வதற்கு இன்று பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனம் எம்முடன் இணைந்து இச்செயற்பாட்டை செய்ய முன் வந்ததை பாராட்டுகின்றேன். இனிவரும் காலத்தில் நல்லதொரு வீரரை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த பயிற்றுனர்கள் கடினமாய் உழைக்க வேண்டும் என கூறினார். இப்பயிற்சி நெறியானது ஒருநாள் உள்ளக வெளிக்கள பயிற்சி நெறியாக அமையவுள்ளதாகவும் கூறினார்.

  இப்பயிற்ச்சி நெறிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போது 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும்  ரவீந்திர புஸ்பகுமார அவர்களும் கிழக்கு மாகான கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் நிலந்த விமலவீர அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் அன்வர் டீன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.

    தலைமை பயிற்றுவிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நல்ல தேக ஆரோக்கியம் உள்ள இளைஞர்கள் உள்ளதாகவும் இவர்களுக்கு நல்ல பயிற்சி வழங்கினால் தேசிய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியதுடன் இச்செயற்பாட்டை செய்யும்    மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்திற்கும் பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்திற்கும் தம் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

   இப்பயிற்சி நெறிக்கு மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் இருந்து பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர். காலை 9.30 தொடக்கம் மாலை 5.30 வரை இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றது

சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வை தடுக்க பலர் முயற்சிகளை மேற் கொண்டனர். இப்பயிற்சி பாசறை நடைபெறுமா? பெறாதா? என பல கேள்விகள் எழுந்த படியே இருந்தன இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஒருமித்து இதை நடாத்தி முடித்தது. இதன் பின் ஒரு மாற்றம் நிகழ்ந்தது அதை அடுத்த தொடரில் பார்ப்போம்.....

தொடர் தொடரும்......



















Comments