அறிந்ததும் அறியாததும் பாகம் (05)........ மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முதல் செயற்பாடு.....

 அறிந்ததும் அறியாததும் பாகம் (05)........

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முதல்  செயற்பாடு.....

     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSVயின்  பங்களிப்பு.....  

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் முதல் தடவையாக பாடசாலைகளுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான T/10 போட்டிகளை 2017 நவம்பர் 11ம் மற்றும் 12 திகதிகளில் சிவானந்தா மைதானத்தில் நடாத்தியது இது ஒரு வெற்றியின் முயற்சியாகவே காணப்பட்டது.

இப்போட்டியில் புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, பெரிய கல்லூரி மத்திய கல்லூரி, சந்திவெளி சித்தி வினாயகர் வித்தியாலயம் என ஆறு பாடசாலைகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்ற தெரிவாகி இருந்தன.

2017.11.12ம் திகதி ஆரம்ப நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் J.R.B.விமல்ராஜ் அவர்களின் தலைமையில் ஆரம்பமாக பிரதம அதீதிகளான மட்டக்களப்பு டெலிகொம் நிறுவனத்தின் முகாமையாளரும், பொறியியலாளருமான Y.கோபிநாத் அவர்களும், உடற்கல்வி ஆசிரியர்களான K.ரவீந்திரன் அவர்களும், Y.அல்பிறன்ஸ் யேசுசகாயம் ஆகியோர் கலந்து கொள்ள போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

 இரண்டாம் நாளில் இரை இறுதி போட்டிகளுக்கு மெதடிஸ்த மத்திய கல்லூரி புனித மிக்கல் கல்லூரியுடன் மோதி மெதடிஸ்த மத்திய கல்லூரி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. மற்றுமொரு அரை இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரிய கல்லாறு மத்திய கல்லூரியும் மோதிக் கொண்டன இதில் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருந்தது.

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி 10 ஓவர்களில் 96 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெரிய கல்லாறு மத்திய கல்லூரி 36 ஓட்டங்களை பெற்றிருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு போட்டிகளின் அடிப்படையில் மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இச்சுற்றுப்போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியின் வீரர் L.ஆகாஸ் அவர்களும் சிறந்த துடுப்பாட்ட வீரராக மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியின் வீரரான S.விதுசன் அவர்களும் தெரிவாக தொடர் ஆட்டநாயகனாக பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணியின் வீரர் S.தனுசன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

முதல் தடவையாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் மெதடிஸ்த மத்திய கல்லூரி முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை பெரிய கல்லாறு மத்திய கல்லூரியும் மூன்றாமிடத்தை சிவானந்தா பாடசாலையும் பெற்றுக் கொண்டது. அத்தோடு முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் வெற்றிகரமாக தம் முதல் பயணத்தை வெற்றி கொண்டது இது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதன் பின் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் வெற்றிகளை பாடசாலை மட்டத்தில் குவித்ததா? என அடுத்த தொடரில் பார்ப்போம்....

(நன்றி பெற்றி நியுஸ்)

தொடர் தொடரும்....










Comments