அறிந்ததும் அறியாததும் பாகம் (04)........ மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஏன் ஏற்படுத்தப்பட்டது.
- Get link
- X
- Other Apps
அறிந்ததும் அறியாததும் பாகம் (04)........ மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஏன் ஏற்படுத்தப்பட்டது.
அறிந்ததும் அறியாததும் பாகம் (04)........
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஏன் ஏற்படுத்தப்பட்டது.
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSV யின் பங்களிப்பு.....
2017ல் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர் ஒன்றுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நகர்புற பாடசாலைகளான புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களை போட்டியில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் மாணவர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொண்டதன் பின்பு தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனத்துடன் கலந்துரையாடி மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை ஆரம்பித்து வைத்தனர் இது பலருக்கு அறியாத செய்தியாகவே இருக்கும் இதை இன்று நாங்கள் தங்களின் பார்வைக்காக அறியத்தருகின்றோம்.
2017ல் நடைபெற்ற இப்போட்டியில் பங்குபற்றிய ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மாத்திரம் விளையாடுவதால் எந்தவித முன்னேற்றமும் மாணவர்களுக்கு ஏற்படாது. மாணவர்களை வெளி மாவட்டத்திற்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்குபெறச் செய்வதால் மாத்திரமே புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ள முடிவதுடன் புதிய புதிய அனுகுமுறைகளை கையாளவும் முடியும் எனவும் குறிப்பிட்டார், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியது போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாடசாலை கிரிக்கெட் சங்கம் உருவாக்கப்பட்டால் பாடசாலை மட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிரிக்கெட் விளையாட்டு மேம்படும் எனவும் தெரிவித்துள்ளார். 2017ல் யூன் யூலை மாதங்களில் தெரிவிக்கபப்ட்ட இக்கருத்துக்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் சம்மேளனத்துடன் இணைந்து கிழக்கு பல்கலை கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரும், அபிவிருத்தி நிபுணத்துவ ஆலோசகருமான சதாசிவம் சசிதரன் அவர்களின் முழு வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 2017.10.30 அன்று மட்டக்களப்பில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதை தான் இன்றும் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் தெரிவித்து வருகின்றது இதற்கான முதல் கட்ட பணிகளை 2017லேயே கோட்டைமுனை விளையாட்டு கழகம் ஆரம்பித்து விட்டது இது பலருக்கு அறியாத விடயமாகவே இருக்கும்.
நேரிய பாதையில் பயணித்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய பலம் சேர்ப்போம் என புதிதாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் அங்கத்தவர்கள் தாம் சுயமாக செயற்பட தொடங்கிய போது அவர்களை செயற்படாமல் தடுக்க பல புல்லுரிவிகள் செயற்படத் தொடங்கின இதை தகர்தெறித்து வெற்றிநடை போட்டதா? அல்லது ஒதுங்கிக் கொண்டதா? மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் சங்கம் என அடுத்த தொடரில் பார்ப்போம்.....
தொடர் தொடரும்.......
Comments
Post a Comment