அறிந்ததும் அறியாததும் பாகம் (03)........ மட்டக்களப்பு பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் அங்குரார்பணம்....
அறிந்ததும் அறியாததும் பாகம் (03)........ மட்டக்களப்பு பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் அங்குரார்பணம்....
மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும் KSV யின் பங்களிப்பு.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளின் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தை உருவாக்குவதற்காக கோட்டைமுனை விளையாட்டு கழகம் பங்காற்றியுள்ளதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிரித்தானியா தமிழ் கிரிக்கெட் சம்மேளத்துடன் British Tamils Cricket League (BTCL) மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் கலந்துரையாடலின் மூலம் கிழக்கு பல்கலை கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரும், அபிவிருத்தி நிபுணத்துவ ஆலோசகருமான சதாசிவம் சசிதரன் அவர்களின் முழு வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 2017.10.30 அன்று மட்டக்களப்பில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் பிரதான நோக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதேயாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்தர பாடசாலைகளான புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிவானந்தா பாடசாலை மற்றும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலைகளை முதற்கட்டமாக உள்வாங்கி மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் உருவாக்கப்பட்டதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் முழு வடிவமைப்புக்களையும், சகல வேலைத்திட்டங்களையும் பல வேலைப்பளுக்களில் மத்தியிலும் தம் பணியை சிறப்பாக செய்து முடித்திருந்தார் கிழக்கு பல்கலை கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரும், அபிவிருத்தி நிபுணத்துவ ஆலோசகருமான சதாசிவம் சசிதரன் அவர்கள். இதன் யாப்பை வடிவமைத்து நிர்வாக தெரிவையும் கச்சிதமாக முடித்திருந்தர்.
இதன் பிரகாரம் போசகராக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் K.பாஸ்கரன் அவர்களும், உப போசகரான உடல் கல்வி உதவி பணிப்பாளர் V.லவக்குமார் அவர்களும், தலைவராக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் J.R.P.விமல்ராஜ் அவர்களும், பொதுச் செயலாளராக சிவானந்தா பாடசாலையின் விளையாட்டுத்துறை ஆசிரியர் M.P.குகாதரன் அவர்களும், பொருளாளராக புனித மிக்கல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா அவர்களும் உப தலைவர்களாக சிவானந்தா பாடசாலையின் அதிபர் S.தயாபரன் அவர்களும் இந்துக்கல்லூரி அதிபர் S.D.முரளிதரன் அவர்களும், பயிற்றுவிப்பாளராக புனி மிக்கல் கல்லூரியின் விளையாட்டு செயலாளர் K..சகான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு புதிய நிர்வகம் பொறுப்பேற்றுக் கொண்டது.
இதன் நோக்கம் முதல் கட்டமாக மட்டக்களப்பு வலயத்தில் உள்ள பாடசாலைகளின் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி சிறந்த வீரர்களை உருவாக்குவதுடன். இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளைகளின் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி கொண்டு செல்வதேயாகும். இதற்காக பல வேலைத்திட்டங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் சுற்றுப் போட்டிகள் நடாத்துவது எனவும் முடிவுகள் எட்டப்பட்டது. இதற்கான முழு ஒத்தழைப்பையும் பிரித்தானியா தமிழ் கிரிக்கெட் சம்மேளத்துடன் மட்டக்களப்பில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழக அங்கத்தவர்களும் செயற்படுத்துவதாக உறுதியும் அளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் வளர்ந்ததா? போட்டிகள் நடைபெற்றதா? என அடுத்த தொடரில் பார்ப்போம்....
தொடர் தொடரும்.......
Comments
Post a Comment