அறிந்ததும் அறியாததும் பாகம் (01)........

 அறிந்ததும் அறியாததும் பாகம் (01)........

     மட்டு மாவட்ட பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சியில் KSC மற்றும்  KSV யின்  பங்களிப்பு.....  



மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை கிரிக்கெட்டினை மேம்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகமும், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராமமும் பல விடயங்களை செய்து வருவதை பலர் அறிந்திருப்பர் பலர் அறியாமலும் இருந்திப்பர் அதில் ஒன்று தான் இது. 

கிட்டத்தட்ட று வருடங்களுக்கு முன் 2016.06.05ம் திகதி  அன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பாடசாலைக்கு பல லட்சம் ரூபாய் பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களையும், கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கான உபகரணங்களையும் அப்போதிருந்த இந்துக்கல்லூரி அதிபர் திரு.அருள்பிரகாசம் அவர்களிடமும், அன்று தொடக்கம் இன்று வரை இருக்கும் இந்துக்கல்லூரி பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் திரு.திருச்செல்வம் அவர்களிடமும், இந்துக்கல்லூரி பாடசாலையின் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் திரு ஜவ்வனன் அவர்களிடமும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினை உருவாக்கிய மூத்த உறுப்பினரான ஏரம்பமூர்த்தி சிவநாதன் அவர்களும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக வீரரும் இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் புவனசிங்கம் வசீகரன் அவர்களும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் சார்பாக இவ்வுபகரணங்களை கையளித்து இருந்தனர். இதில் முக்கியமானதொரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன்  1972ம் ஆண்டு கோட்டைமுனை மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற மாணவர்களை ஒன்றினைத்து கோட்டைமுனை விளையாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது ஏ.சிவநாதன் அவர்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு கோட்டைமுனை யூத் எனும் பெயரினை சூட்டி இருந்தார் இது பலருக்கு அறியாத விடமாக இருக்கலாம்.

 இந்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண 19 வயதிற்குட்பட்டோருக்கான பாடசாலை கிரிக்கெட் அணிக்கு ட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  இந்துக்கல்லூரி மாணவர்களான ரெட்ணராஜா தேனுரதன் மற்றும் மோகனசுந்தரம் சாருகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களை கோட்டைமுனை விளையாட்டு கழகம் கௌரவித்திருந்தது. இவ்விரு வீரர்களும் அப்போது கோட்டைமுனை விளையாட்டு கழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடமாக இருந்தது.

இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் திரு.பிரதீபன் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவரான செல்வி.ஐடா அவர்களும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் செயலாளர் பாலசிங்கம் ஜெயதாசன் அவர்களும் பாடசாலை ஆசியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

அப்போதே 2016ல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரரை இலங்கையின் முதல்தர  அணிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என கோட்டைமுனை விளையாட்டு கழகம் சிந்திக்கத் தொடங்கியது அதற்கான ஆயத்த பணிகளை தாம் செய்து கொண்டிருப்பதாக இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்திருந்த மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரான புவனசிங்கம் வசீகரன் அவர்கள் தெரிவித்து இருந்தார். இதற்காக இவ்விரு வீரர்களில் இருந்து ஒருவரை கொழும்பில் உள்ள மிகவும் பிரபலம் வாய்ந்த கிரிக்கெட் கழகத்தில் இணைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யார் அந்த வீரர் என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்....

தொடர் தொடரும்......











Comments