காத்தான்குடி பிரதேச செயலகத்தில் CBO அலுவலகம் திறந்து வைப்பு.....
சமுர்த்தி வேலைத்திட்டத்தில் தற்போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் (CBO) ஊடாக பல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதற்காக கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு சகல பிரதேச செயலங்கள் ஊடாகவும் அதன் பணிகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கும் ஒவ்வொரு காரியாலயம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகின்றன. இதற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 167/B மற்றும் 162A கிராமங்களுக்கான அலுவலகம் அன்மையில் காத்தான்குடி உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.M.S.சில்மியா அவர்களால் அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிருதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பொது மக்களும் கலந்த கொண்டனர்.
Comments
Post a Comment