புலிபாய்ந்தகல்லில் மற்றுமொரு புதிய சமுர்த்தி சமுதாய அடிப்படைவங்கி திறந்து வைப்பு.....

புலிபாய்ந்தகல்லில் மற்றுமொரு புதிய சமுர்த்தி சமுதாய அடிப்படைவங்கி திறந்து வைப்பு..... 

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக மற்றுமொரு  சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி கோராவெளி கிராமத்தில் புலிபாய்ந்தகல் சமுர்த்தி  சமுதாய அடிப்படை வங்கியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், மட்டக்களப்பு பாராளுமன்ற உருப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் மக்கள் பாவனைக்காக 22.12.2021 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கோராவெளி, திகிலிவெட்டை, புலாக்காடு, வாகனேரி, குடும்பிமலை, பேரிலாவெளி,  முறுத்தானை போன்ற கிராமத்தில் வாழும் மக்கள் சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு செல்வதற்கு போக்குவரத்து மிக பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. பெரும்பாலும் மக்கள் தங்கள் தனிப்பட்ட போக்குவரத்தினையே பயன்படுத்தி சமுர்த்தி வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை விட மிக முக்கியமாக ஒரு விடயம் இங்கு காணப்படுகின்றது குறிப்பாக நவம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரை மழைகாலமாக காணப்படுவதால் புலிபாய்ந்தகல் பிரதேச செயலகத்திற்கு அன்டியதாக காணப்படும் கிராம மக்கள் ஒரு பாலத்தினை கடந்தே சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு வருகை தரவேண்டும். ஆனால் இக்கால கட்டத்தில் இப்பாலத்தின் மேலாக வெள்ளம் பரவிச் செல்வதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாகவே கணப்படுகினறது.  இது போன்ற பல அன்றாட பிரச்சனைகளில் மக்கள் பாதிக்கப்படுவதால் இதனை கருத்தில் கொண்டு இவ்வங்கி புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 26 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இச்சமுர்த்தி திட்டத்தில் மக்களுக்கான  பல செயற்பாடுகள் செய்யப்படுவதை நாம் அறிவோம்.  தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை இன்றுடன் இரண்டு வங்கிகள்  திறக்கப்பட்டு 31 சமுர்த்தி சமுதாய அடிப்படைவ ங்கிகள் இன்றுடன் செயற்படவுள்ளன.

கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், மட்டக்களப்பு பாராளுமன்ற உருப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் மக்கள் பாவனைக்காக 22.12.2021 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன்  அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி வங்கிப்பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜா அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், கிரம உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். கோப்பாவெளி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளராக கந்தசாமி வினோதினி  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.





















Comments