களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா வீடு பயனாளியிடம் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சௌபாக்கியா வீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் துறைநீலாவணை - தெற்கு-01 கிராம உத்தியோகத்தர் பிரிவின் சமுர்த்தி பயனுகரியான ஜானகி ஜெயகுமார் என்பவருக்குரிய வீடு கையளித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார் அவர்களும், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.ரவிந்திரன் அவர்களும், கிராம சேவை உத்தியோகத்தர் P.புனிதன் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் (திட்டமிடல்) ரஜனி வினோதன் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சதாமதி ருபேந்திரன் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவர்களும், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் உதுமா லெவ்வை சஜானா அவர்களும், பட்டதாரி பயிலுனர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment