சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தில் சமுர்த்தி பயனுகரிகளுக்கு கால்நடைகள் வழங்கி வைப்பு.......
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் S.H..முசம்மில் அவர்களின் தலைமையில் சௌபாக்கியா வாரா நிகழ்வுகள் அன்மையில் நடைபெற்றன இதன் போது சமுர்த்தி பயனாளிகள் தாம் மேற்கொள்ளும் தொழில் முயற்சியை மேலும் மேம்படுத்துவதற்காக அவர்களுக்கான கால்நடைகள் மற்றும் உள்ளீடுகள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குபட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திதிற்குபட்ட 17 சமுர்த்தி பயனாளிகளுக்கான கால்நடைகள் மற்றும் உள்ளீடுகள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்கள் வழங்கி வைத்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயகத்தில் 200000 குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு 163 சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டள்ளதாகவும் கடந்த காலங்களில் ஒரு தொகுதி சமுர்த்தி பயனாளிகளுக்கான உள்ளீடுகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டதாகவும் வழங்கப்படுவதாகவும் பிரதேச செயலாளர் S.H..முசம்மில் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.ருவைத் அவர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் M.ருமைஷ், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment