சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்......
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி மாதாந்த மீளாய்வுக் கூட்டம் 27.12.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 200000 குடும்பங்கள் மேம்படுத்தல் தொடர்பாக முன்னேற்றம் ஆராயப்பட்டதுடன், விசேட கருத்திட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் தொடர்பாகவும் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டது.
சௌபாக்கியா 200000 வீடுகள் மற்றும் 600000 வீடுகள் பற்றிய முன்னேற்றமும் ஆராயப்ட்டதுடன், திரியபியச வீடுகள், பற்றிய முன்னேற்றமும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளார் நிர்மலாதேவி கிரிதராஜா அவர்களும், மாவட்ட சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment