ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வீடுகள் கையளிப்பு....
சமுர்த்தி நிவாரணத்தில் சமுர்த்தி பயனாளிக்கு வீட்டு அதிஸ்டத்தில் வெற்றி பெற்ற சமுர்த்தி பயனாளிக்கு வீடு அமைக்கப்பட்டு உரிய பயனாளியிடம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்களினால் கையளிக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற மீராவோடை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிக்கும் சௌபாக்கியா வீட்டினை பூரணப்படுத்திய ஓட்டமாவடி 208B/2 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த பயனாளியினதும் வீடுகள் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment