சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தில் நூலகம் திறந்து வைப்பு...
சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வானவில் சிறுவர் சமுர்த்தி கழகத்தால் நூலகம் ஒன்று ஓட்டமாவடி தாருள் உலூம் வித்தியாலத்தில் பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்களால் திறந்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
சமுர்த்தி திட்டத்தில் மிகவும் பயனுள்ளதான இச் செயற்பாடு மாணவர்களின் கல்வி அறிவை மேலும் வளர்த்தெடுக்க உதவியாக இருக்கும். இச்செயற்பாட்டை செய்வதற்கு பாடசாலை மட்டத்தில் அனுமதித்த அதிபர் அவர்களுக்கும், இச்செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் வழங்கிய பிரதேச செயலாளருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் திட்டத்தை முழுமையாக செயற்படுத்த உறுதுணையாக இருந்த ஓட்டமாவடி சமுர்த்தி தலைமைய முகாமையாளருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment