மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒன்றுகூடல்....

 மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒன்றுகூடல்....

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி அலுவலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்கத்தின் ஒன்றுடல் நிகழ்வு 12.12.2021 அன்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான திருமதி.அ.பாக்கியராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வொன்றுகூடல் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பிரிவின் கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது தம் திறமைகளை வெளிக்ககொனர்ந்தவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இந்நிகழ்வை ஒழுங்கமைத்த நலன்புரிச்சங்கத்தின் செயலாளர் மகேந்திரன் பிரதீபன் அவர்களுக்கும், பொருளாலர் திருமதி. மஞ்சுளா சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாராட்டும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.













Comments