தருமலிங்கம் சபாரெத்தினம் சமுர்த்தி முகாமையாளர் ஓய்வு நிலைக்கு.....

 தருமலிங்கம் சபாரெத்தினம் சமுர்த்தி முகாமையாளர் ஓய்வு நிலைக்கு.....

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12.12.2021 அன்று மற்றுமொரு சமுர்த்தி முகாமையாளரான தருமலிங்கம் சபாரெத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.

1996ம் ஆண்டு சமுர்த்தி முகாமையாளராக அம்பாரை மாவட்டத்தில் தம் பணியை ஆரம்பித்த இவர் 2013ம்  ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கடமையை மேற்கொண்டு வந்தார். இவர் இறுதியாக கருத்திட்ட முகாமையாளராக பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி தற்போது ஓய்வு நிலைக்கு செல்கின்றார்.

சமுர்த்தி திட்டத்திற்கென சிறப்பான சேவையாற்றி இவரின் சேவையை பாராட்டும் நிகழ்வு 12.12.2021  அன்று சமுர்த்தி முகாமையாளர் அ.குககுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதன் போது சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதுவரை காலமும் மக்களுக்காக சேவையாற்றி ஓய்வு நிலைக்கு செல்லும் தருமலிங்கம் சபாரெத்தினம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் இனி வரும் காலங்களில் தன் குடும்பத்தாருடன் இனிதாக வாழ நாமும் வாழ்த்துவோம்.









Comments