மட்டு மாவட்டத்தில் முதல் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது......
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஒரு சமுர்த்தி உத்தியோகத்தருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி திணைக்களத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று - ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய சமுர்த்தி உத்தியோத்தரான கணபதிப்பிள்ளை குணசேகரம் என்பவருக்கே முதல் முதலில் ஓய்வூதியம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி திட்டம் 1995ம் ஆண்டு சமுர்த்தி அதிகார சபையின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட போது சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களுக்கு சேமலாபநிதியின் (EPF) ஊடாகவே அவர்களை இணைத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தது. இதன் பின் சமுர்த்தி திணைக்களமாக மாற்றம் பெற்றதன் பின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக் கொள்ளப்பட்டதுடன் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10.12.2021 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஒரு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இனி வரும் காலங்களில் மிக விரைவாக ஓய்வு நிலைக்கு சென்ற சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
Comments
Post a Comment