புதிதாக திறக்கப்படவுள்ள மற்றுமொரு சமுர்த்தி வங்கியான புலிபாய்ந்தகல் சமுர்த்தி வங்கி பற்றிய ஒரு பார்வை.....
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் சந்திவெளி சமுர்த்தி வங்கி மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றது. கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் இந்த சந்திவெளி சமுர்த்தி வங்கி இயங்கி வருகின்றது. சந்திவெளி சமுர்த்தி வங்கி தேவபுரம் தொடக்கம் முறுத்தானை வரையிலான 17 கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இதில் ஊத்துச்சேனை கிராமமானது சந்திவெளி சமுர்த்தி வங்கியில் இருந்து 49 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?.
சந்திவெளி சமுர்த்தி வங்கியில் தேவபுரம், முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, பாலையடிதோனா, கோரகல்லிமடு, கிரான் கிழக்கு, கிரான் மேற்கு, திகிலிவெட்டை, கோராவெளி, பூலாக்காடு, வடமுனை, ஊத்துச்சேனை, புணானண, வாகனேரி, குடும்பிமலை, பேரில்லாவெளி, முறுத்தானை என 17 கிராமங்களை உள்ளடக்கி இயங்கி வருகின்றது. இச்சமுர்த்தி வங்கியில் 5742 சமுர்த்தி பயனுகரிகள் சமுர்த்தி நிவாரனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சந்திவெளி சமுர்த்தி வங்கியானது தற்போது பங்கு, அங்கத்தவர் கணக்காக 9006 கணக்குகளும், குழு கணக்காக 1253 கணக்குகளும், அங்கத்தவர் அல்லாதோர் கணக்காக 4095 கணக்குகளும், திரியமாதா கணக்காக 990 கணக்குகளும், சிறுவர் கணக்காக 833 கணக்குகளும், சிசுரக்க கணக்காக 509 கணக்குகளும், கட்டாய சேமிப்பு கணக்காக 5742 கணக்குகளுமாக மொத்தம் 31434 கணக்குகளை கொண்ட ஒரு வங்கியாகவும் செயற்படுகின்றது. மற்றும் 2316 சமுர்த்தி கடன்களை சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கி சேவையாற்றி வருகின்றது.
சந்திவெளி சமுர்த்தி வங்கியானது கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் இருந்து மிக தொலைவில் அமைந்ததால் இப்பிரதேச செயலகத்தை அன்டியதாக காணப்படும் பல கிராமங்கள் சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு வருவதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றது. குறிப்பாக முறுத்தானை கிராமத்து மக்கள் சந்திவெளி சமுர்த்தி வங்கியில் தங்கள் தேவைகைளை ஈடுபடுவதில் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். இதை தவிர்த்து மாலை நேரத்தின் பின்னர் இப்பாதையூடாக பயணிப்பதில் மிக அவதானம் தேவைப்படுகின்றது ஏனெனில் காட்டுபாதையாக காணப்படுவதால் யானைகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகின்றது.
இதைவிட போக்குவரத்து மிக பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. பெரும்பாலும் மக்கள் தங்கள் தனிப்பட்ட போக்குவரத்தினையே பயன்படுத்தி வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை விட மிக முக்கியமாக ஒரு விடயம் இங்கு காணப்படுகின்றது குறிப்பாக நவம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரை மழைகாலமாக காணப்படுவதால் புலிபாய்ந்த கல் பிரதேச செயலகத்திற்கு அன்டியதாக காணப்படும் கிராம மக்கள் ஒரு பாலத்தினை கடந்தே சந்திவெளி சமுர்த்தி வங்கிக்கு வருகை தரவேண்டும். ஆனால் இக்கால கட்டத்தில் இப்பாலத்தின் மேலாக வெள்ளம் பரவிச் செல்வதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாகவே கணப்படுகினறது. இது போன்ற பல அன்றாட பிரச்சனைகளில் மக்கள் பாதிக்கப்படுவதால் மாற்று திட்டமாக புதிதாக ஒரு சமுர்த்தி வங்கியை இப்பிரதேச செயலகத்தில் உருவாக்குவதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் எனும் தூர நோக்க சிந்தனையில் தற்போது செயற்படும் சந்திவெளி சமுர்த்தி வங்கியை இரண்டாக பிரித்து கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் இரண்டாவது சமுர்த்தி வங்கியாக புலிபாய்ந்தகல் சமுர்த்தி வங்கி திறக்கப்படவுள்ளதை மகிழ்ச்சியுடன் முதலில் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
புதிதாக கோராவெளி கிராமத்தில் புலிபாய்ந்தகல் சமுர்த்தி வங்கி அமையப்படவுள்ளது இவ்வங்கி அங்கு அமையப்பெறுவதால் முறுத்தானை கிராம மக்கள் தங்கள் வங்கி நடவடிக்கைகளை முடிக்க 20 கிலோ மீட்டரையே மாத்திரமே கடக்க வேண்டி வருவதுடன் கோராவெளி, திகிலிவெட்டை, புலாக்காடு, வாகனேரி, குடும்பிமலை, பேரிலாவெளி ஆகிய கிராம மக்கள் குறுகிய தூர எல்லைக்குள்ளேயே தங்கள் சமுர்த்தி வங்கி சேவையை பெற வாய்ப்பு கிட்டும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை, எனவே இவ்வேழு கிராமங்களை உள்ளடக்கியதாக இவ்வங்கி அமையப்படவுள்ளது.
புதிய வங்கி ஆரம்பிக்கப்படும் சந்தர்பத்தில் சந்திவெளி சமுர்த்தி வங்கியின் பணிச்சுமை குறைவடைவதுடன் அவ்வங்கிக்கான ஆளணியும் சிறப்பாக செயற்படும். இதனால் கடன் வழங்குதல் அறவீடுதல், சமுர்த்தி கொடுப்பணவு வழங்குதல் இலகுவடைய கூடியதாக காணப்படும் அத்துடன் மக்கள் தங்கள் பணிகளை விரைவாக முடிக்க கூடியதாகவும் தொலை தூர பயணங்களை குறைக்க கூடியதாக அமையும்.
எனவே தற்போது புலிபாய்ந்தகல் சமுர்த்தி வங்கி மற்றும் கோப்பாவெளி சமுர்த்தி வங்கி அமையப் பெறுவதால் மக்களுக்கு பல நன்மைகளை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை. ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்விரு வங்கிகளையும் அமைக்க மும்முரமாக செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்களுக்கும் ஏறாவூர் பற்று மற்றும் கோரளை பற்று தெற்கு பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களுக்கும் இதை துரிதமாக செயற்படுத்த உதவி வரும் அனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment