புதிதாக திறக்கப்படவுள்ள கோப்பாவெளி சமுர்த்தி வங்கி பற்றிய ஒரு பார்வை.....
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் தற்போது ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி, மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி, கரடியனாறு சமுர்த்தி என மூன்று சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருகின்றன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டருக்கு அப்பால் கரடியனாறு சமுர்த்தி வங்கி இயங்கி வருகின்றது. இந்த கரடியனாறு சமுர்த்தி வங்கிக்கு உட்பட்டதாக 11 கிராமங்கள் காணப்படுகின்றன. கொம்மாதுறை மேற்கு தொடக்கம் மங்களகம வரையிலான கிராமங்கள் பதுளை வீதியில் காணப்படுகின்றன. இதில் கொம்மாதுறை மேற்கு கிராமமானது செங்கலடி பிரதேச செயலகத்தில் இருந்து 14 கிலோ மீட்டருக்கு அப்பால் கரடியனாறு வங்கி அமைந்துள்ளது, மங்களகம கிராமமானது கரடியனாறு சமுர்த்தி வங்கியில் இருந்து 38 கிலோ மீட்டருக்கு அப்பாலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கரடியனாறு சமுர்த்தி வங்கியில் கொம்மாதுறை மேற்கு, கொடுவாமடு, பன்குடாவெளி, வேப்பவெட்டுவான், கரடியனாறு, மரப்பாலம், கித்துள், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, மங்களகம என 11 கிராமங்களை உள்ளடக்கி இயங்கி வருகின்றது. இக்கிராமங்களில் 3009 சமுர்த்தி பயனுகரிகள் சமுர்த்தி நிவாரனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கரடியனாறு சமுர்த்தி வங்கியானது தற்போது 12130 வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு வங்கியாகவும், 22166 கணக்குகளை கொண்ட ஒரு வங்கியாகவும் செயற்படுகின்றது. மற்றும் 4448 சமுர்த்தி கடன்களை சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கி சேவையாற்றி வருகின்றது.
கரடியநாறு சமுர்த்தி வங்கி மிக தொலைவில் அமைந்ததால் பல இன்னல்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். மங்களகம கிராமத்தில் இருந்து மக்கள் 38 கிலோ மீட்டர் கடந்து வந்தே கரடியனாறு சமுர்த்தி வங்கியில் தங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் பெரிய புல்லுமலை மக்கள் 20 கிலோ மீட்டரை கடந்து வந்தே தம் சேவையை வங்கியில் பெற்றனர். இதை தவிர்த்து மாலை 3.00 மணிக்கு பின்னர் இப்பாதையூடாக பயணிப்பதில் மிக அவதானம் தேவைப்படுகின்றது ஏனெனில் காட்டுபாதையாக காணப்படுவதால் யானைகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகின்றது. இதைவிட போக்குவரத்து மிக பாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. பெரும்பாலும் மங்களகம கிராமத்தில் இருந்து மக்கள் தனிப்பட்ட போக்குவரத்தினை பயன்படுத்தியே வருகின்றனர். இது போன்ற அன்றாட பிரச்சனைகளில் மக்கள் பாதிக்கபடுவதால் புதிதாக ஒரு சமுர்த்தி வங்கியை உருவாக்குவதன் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் எனும் நிலையில் தற்போது செயற்படும் கரடியனாறு சமுர்த்தி வங்கி இரண்டாக பிரிக்கப்படவுள்ள மகிழ்ச்சியான செய்தியை முதலில் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
புதிதாக கோப்பாவெளி கிராமத்தில் ஒரு சமுர்த்தி வங்கி அமையப்படவுள்ளது சுமார் மங்களகம கிராமத்தில் இருந்து 28 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் இவ்வங்கி அமையப்படவுள்ளது. கோப்பாவெளி சமுர்த்தி வங்கியில் மங்களகம் கிராமம், பெரியபுல்லுமலை கிராமம், கித்துள் கிராமம், உறுகாமம் கிராமம், கோப்பாவெளி கிராமம் உள்ளடக்கியதாக ஐந்து கிராமங்களை உள்ளடக்கி இவ்வங்கி செயற்படவுள்ளது. இதனால் சுமார் 4032 வாடிக்கையாளர்களையும், 7000 கணக்குகளையும், 1150 சமுர்த்தி கடன்களையும் கோப்பாவெளி சமுர்த்தி வங்கிக்கு மாற்றும் சந்தர்பத்தில் கரடியனாறு சமுர்த்தி வங்கியின் பணிச்சுமை குறைவடைவதுடன் வங்கிக்கான ஆளணியும் சிறப்பாக செயற்படும். இதனால் கடன் வழங்குதல் அறவீடுதல், சமுர்த்தி கொடுப்பணவு வழங்குதல் இலகுவடைய கூடியதாக காணப்படும் அத்துடன் மக்கள் தங்கள் பணிகளை விரைவாக முடிக்க கூடியதாகவும் தொலை தூர பயணங்களை குறைக்க கூடியதாக அமையும்.
எனவே கோப்பாவெளியில் சமுர்த்தி வங்கி அமையப் பெறுவது பல நன்மைகளை கொண்டு வருவதுடன் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்வங்கியை அமைக்க செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்களுக்கும் அவரை சார்ந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாளை புதிதாக ஆரம்பிக்கபடவுள்ள புலிபாய்ந்த கல் சமுர்த்தி வங்கி பற்றிய விபரத்தை பார்ப்போம்.......
Comments
Post a Comment