22.12.2021 அன்று மட்டு மாவட்டத்தில் இரண்டு புதிய சமுர்த்தி வங்கிகள் திறந்து வைக்கப்படவுள்ளன.....

 22.12.2021 அன்று மட்டு மாவட்டத்தில் இரண்டு புதிய சமுர்த்தி வங்கிகள் திறந்து வைக்கப்டவுள்ளன.....

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக இரண்டு சமுர்த்தி வங்கிகள் நாளை 22.12.2021 அன்று திறந்த வைக்கப்படவுள்ளன. மக்களின் நலன் கருதி கரடியநாறு சமுர்த்தி வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு கோப்பாவெளி வங்கியும், சந்திவெளி சமுர்த்தி வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு புலிபாய்ந்தகல் சமுர்த்தி வங்கியென இரு சமுர்த்தி வங்கிகள் திறக்கப்படவுள்ளன.

கோப்பாவெளி சமுர்த்தி வங்கியில் மங்களகம் கிராமம், பெரியபுல்லுமலை கிராமம், கித்துள் கிராமம், உறுகாமம் கிராமம், கோப்பாவெளி கிராமம் உள்ளடக்கியதாக  ஐந்து கிராமங்களை உள்ளடக்கி இவ்வங்கி செயற்படவுள்ளது. புலிபாந்தகல் சமுர்த்தி வங்கியில் முறுத்தானை, கோராவெளி, திகிலிவெட்டை, புலாக்காடு, வாகனேரி, குடும்பிமலை, பேரிலாவெளி கிராமம் உள்ளடக்கியதாக  ஏழு கிராமங்களை உள்ளடக்கி இவ்வங்கி செயற்படவுள்ளது. இத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 31 சமுர்த்தி வங்கிகள் இயங்கப்படவுள்ளது.






Comments