200000 சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கோழி குஞ்சுகள் வழங்கி வைப்பு.......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடுபூராவும் 200000 சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது துரித கதியில் நடைபெற்று வருகின்றது. இதன் போது சமுர்த்தி பயனாளிகள் தாம் மேற்கொள்ளும் உற்பத்தி முயற்சியை மேலும் மேம்படுத்துவதற்காக அவர்களின் தொழில்சார் உள்ளீடுகள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 14 சமுர்த்தி பயனுகரிகளுக்கு கோழிக்குஞ்சுகள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கணக்காளர் திரு.மோகனகுமார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் M.ருமைஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 14 சமுர்த்தி பயனுகரிகளுக்கு 10 கோழிக்குஞ்சு வீதம் 1400 கோழிக்குஞ்சுகள் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment