மட்டக்களப்பு மாவட்டம் 164 பதக்கங்களை பெற்று முதலிடம்......
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் 164 பதங்கங்களை பெற்று முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாணத்திற்கான விளையாட்டு விழா கடந்த 10ம் 11ம் திகதிகளில் திருகோணமலை கந்தளாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்ட வீர வீராங்கனைகள் போட்டியில் பங்குபற்றி இருந்தனர். இதில் மட்டக்களப்பு மாவட்டம் 64 தங்கப்பதக்கங்கம், 52 வெள்ளிப்பதங்கம் மற்றும் 52 வென்கலப் பதக்கங்களுமாக மொத்தம் 164 பதக்கங்களை பெற்று முதலாமிடத்தை பெற்றுக் கொண்டது. திருகோணமலை மாவட்டம் 57 தங்கப்பதக்கங்கம், 53 வெள்ளிப்பதங்கம் மற்றும் 20 வென்கலப் பதக்கங்களுமாக மொத்தம் 130 பதக்கங்களை பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது. அம்பாரை மாவட்டம் 42 தங்கப்பதக்கங்கம், 34 வெள்ளிப்பதங்கம் மற்றும் 22 வென்கலப் பதக்கங்களுமாக மொத்தம் 98 பதக்கங்களை பெற்று மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டது.
மட்டக்களப்பு மாட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள இச்சாதனை போட்டிக்கு அயராது உழைத்த மாவட்ட விளையாட்டு அதிகாரி, செயலக விளையாட்டு அதிகாரிகள் மற்றும் இப்போட்டிகளில் தமது திறமைகளை வெளிக் கொணர்த்த அனைத்து போட்டியாளர்களுக்கும் எம் வாழத்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment