மாவடி முன்மாரி சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி பயனாளிகளுக்கு பழ மரக்கண்றுகள் வழங்கி வைப்பு .....
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடு பூராவும் மனைப்பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றன. இதன் கீழ் சமுர்த்தி பயனாளிகளின் வீட்டுத்தோட்டத்தை விருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு மாவடி முன்மாரி சமுர்த்தி வங்கியில் வைத்து மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.கௌ.டினேஸ் அவர்களால் 2021.11.03 அன்று பழ மரக்கண்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் அ.குககுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவடி முன்மாரி சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், மற்றும் சமுர்த்தி அபிவிருத்து உத்தியோக்கத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment