முதல் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் காரியாலயம் திறந்து வைப்பு.....

 முதல் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் காரியாலயம் திறந்து வைப்பு.....

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் காரியாலயம் கிரான்குளம் மத்தி கிராமத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்களால்  24.11.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சமுர்த்தி சங்கங்களாக  குழுக்களை கட்டுப்படுத்தி செயற்படுத்திய சமுர்த்தி சங்கங்கள்,  தற்போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் என மாற்றம் பெற்று புதிய  செயற்பாடுகளுடன் செயற்படத் தொடங்கியுள்ளன. இதற்காக தற்போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டு செயற்படத் தொடங்கியுள்ளன.

 எனவே இச் செயற்பாடுகளை செயற்படுத்த சங்கங்களுக்கு தனித்தனி காரியாலயங்கள் அமைத்து கொடுக்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில் மண்முனை பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாளங்குடா சமுர்த்தி வலயத்தில் கிரான் குளம் மத்தி கிராம சேவகர் பிரிவில் அப்பர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் காரியாலய திறப்பு விழா நிகழ்வானது மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி.சச்சிதானந்தி நமச்சிவாயம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்கள் கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மண்முனைபற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.க.புவனேந்திரன் அவர்களும், தாளங்குடா சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் U.L.சம்சுதீன் அவர்களும், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.விஜயா கிருபாகரன் அவர்களும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை பிறேமிளா, சமுர்த்தி பயனுகரி என பலரும் கலந்து கொண்டனர்.

இச்சமுதாய அடிப்படை அமைப்பிற்கு பல புதிய திட்டங்களை செயற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. இவ்வமைப்புக்களுக்கு சமுர்த்தி வங்கியூடாக கடன்கள் வழங்கப்பட்டு அப்பணத்தில் கிராமத்தில் அன்றாட தொழிலில் ஈடுபடும் சிறு முயற்சியாளர்களுக்கு இவ்வமைப்பு சிறு சிறு கடன்களை வழங்கி இதனை அறவீடு செய்து அதை சமுர்த்தி வங்கிக்கு செலுத்த வேண்டும். இதன் மூலம் தம் கிராமத்தின் உடனடியாக தேவைப்படும் பணத்தினை உடனுக்குடன் கிராமத்திலேயே பெற்றுக் கொள்ள வாய்ப்பு இதனால் கிட்டியுள்ளது. இதன் போது சமுர்த்தி பயனுகரிகளுக்கு புதிதாக கடன்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"சமுர்த்தி திட்டத்தின் வரலாற்றில் இதுவும் ஒரு பாரிய மாற்றமாகும்"














Comments