மட்டு மாவட்டத்தில் மற்றுமொரு சமுர்த்தி உத்தியோகத்தர் இன்றுடன் ஓய்வூ பெறுகின்றார்......
சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தன் அர்பணிப்பான சேவையை மக்களுக்கு வழங்கிய மண்முனை தென் எருவில் பற்று- களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மகிழுர்-மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இராசதுரை கிருபைராசா அவர்கள் 23.11.2021 ஆகிய இன்று முதல் அரச சேவையிலிருந்து ஓய்வூ பெறுகின்றார்.
மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்த இராசதுரை நேசம்மா தம்பதிகளின் புதல்வரான இவர் குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். இவர் குருமண்வெளி - கிழக்கு, தேற்றாத்தீவு - வடக்கு மற்றும் மகிழுர் - மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி விடைபெற்றுச் செல்லவுள்ளார்.
சுமார் 21 வருடகாலம் தன் சேவையை மக்களுக்காக அர்பணித்து பல இக்கட்டான கால கட்டத்தில் தன் உயிரையும் துச்சமென மதித்து சேரவயாற்றிய இச்சேவையாளனை நாமும் பாராட்டுவதோடு இனி வரும் காலங்களில் தன் குடும்பத்துடன் இனிதே வாழ வாழ்த்துவோம்....
Comments
Post a Comment