மாங்கேணி சமுர்த்தி வங்கியில் சேதனை பசளை உற்பத்தி நிகழ்வு....
சமுர்த்தி திட்டத்தின் ஊடாக சேதனை பசளை உற்பத்திக்கான நிகழ்வு அன்மையில் மாங்கேணி சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது வாகரை பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சேதனைப்பசளை உற்பத்தி தொடர்பாக சமுர்த்தி பயனுகரிகளுக்கு செயல் முறை பயிற்சி வழங்கப்பட்டதுடன் அதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. இவர்களுக்கான பயிற்சிகளை விவசாயப் போதனாசிரியர்களான R.பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்டது. இதன் போது வாகரை பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.கலைவானி அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனுகரிகள் என பலரும் கலந்த கொண்டனர்.
Comments
Post a Comment