போரதீவு பற்று பிரதேச செயலக சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்.....

 போரதீவு பற்று பிரதேச செயலக சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்.....



நாட்டில் உள்ள 200000 சமுர்த்தி குடும்பங்களை மேன்படுத்தும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு  வாழ்வாதார உதவிகளை  போரதீவு பற்று  பிரதேச செயலாளர் செல்வி.இ.ராகுலநாயகி அவர்களால் 2021.11.09  அன்று  சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் உள்ள வறிய மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்தி அவர்களை மேலும் வலுவடைச் செய்வதற்காக சமுர்த்தி திணைக்களம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் மூலம் அவர்களின் தொழில் முயற்சியை ஊக்குவிப்பதற்காக அத் தொழிலுக்கான உள்ளீடுகளும் உபகரணங்களும் கையளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக போரதீவு பற்று பிரதேச செயலகத்திலும் இந்நிகழ்வு இடம்பெற்றன.

இந்நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  ஆறுமுகம் தனேந்திரராஜா அவர்களும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சாமித்தம்பி கஜேந்திரகுமார்  அவர்களும், கலந்து கொண்டனர்.



Comments