நானும் என் சமுர்த்தியும் 93ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 93ம் தொடர்.......



வருடாந்தம் நடைபெறும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வாரம  2012ம் ஆண்டிலும் மே 31 தொடக்கம் யூன் 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் ஸ்ரீ சக்தி வித்தியாலத்தின் உதவியுடன் மே 31 பாடசாலை வளாகத்தில் இருந்து முதல் கொடியினை ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்சோதி அவர்களுக்கு வழங்கிய பின் பேரணியை ஆரம்பித்தேன். எனது மக்கள் வீடு வீடாக, வீதி வீதியாக சென்று கொடி விற்பனையில் ஈடுபட்டனர். இதன் போது பலரது நகைப்பிற்கும் அவர்கள் ஆளானார்கள், இதை எல்லாம் பொருட்படுத்தாது என் மக்கள் தங்கள் பணியை செய்தனர். இதன் போது ஸ்ரீ சக்தி வித்தியாலய மாணாக்கர்களின் கோசம் கல்லடி வேலூரையே அதிர வைத்தது. பாடசாலையில் ஆரம்பித்த பேரணி சரவண வீதியூடாக சென்று கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்தது. அங்கே திருச்செந்தூர் கிராம சமுர்த்தி சங்கங்களின் புகைத்தல் தொடர்பான தெருக்கூத்து நடைபெற்றது.



இதன் போது அவ்விடத்திற்கு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும் சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார சமுர்த்தி பணிப்பாளர் M.நடேசராஜா அவர்களும், மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், கல்லடி வலய சமுர்த்தி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது எனது கல்லடி வேலூர் கிராமத்தின் சங்கத் தலைவர்களால் அதிதிகளுக்கு புகைத்தல் எதிர்ப்பு கொடிகள் வழங்கப்பட்டது. இதன் பின் இப்பேரணி தொடர்ந்து சென்று கல்லடி சமுர்த்தி வங்கியை சென்றடைந்தது, அங்கு சமுர்த்தி பயனுகரிகளுக்கு புகைத்தல் பாதிப்பு பற்றியும் இன்று சேகரிக்கப்படும் பணம் எதற்காக பயன்படுத்தப்படும் என்பன பற்றி சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார சமுர்த்தி பணிப்பாளர் M.நடேசராஜா அவர்கள் எடுத்துரைத்தார்.

மே 31 நகர எமது சேமிப்பும் நகர்ந்து கொண்டிருந்தது யூன் 16ம் வந்தது அனைவரும் சேமிப்பை நிறுத்தி விட 17ம் திகதி சேமிப்புக்கள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தொடங்கியது பதற்றம் அது என்னையும் சூழ்ந்து கொண்டது. கல்லடி வலயத்தில் சேமிப்புக்கள் எண்ணப்பட முடிவுகள் அறிவிக்க தயாரானார் K.தங்கத்துரை முகாமையாளர் மீண்டுமொரு முறை கல்லடி வேலூர் அதிக சேமிப்பு செய்து முதலிடத்தை வலய மட்டத்தில் பெற்றுக் கொண்டது.

 


அடுத்த கட்டமாக பிரதேச செயலக மட்டத்தில் சேமிப்பு அறிவிக்கப்பட விருந்தது, இதற்கான நேரமும் வந்தது பிரதேச செயலக மட்டத்திலும் கல்லடி வேலூர் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டதாக அறிவிக்கபட்டது. அடுத்தது மாவட்ட மட்டம் எனக்கு ஒரே பதற்றம் இம்முறை கிடைக்குமா? என ஆவலாய் இருந்து ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் கிட்டியது. மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடம் தான் கிடைத்தது. 




2012ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனையில் 7.011 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரட்ணம்  அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்  2011ம்  ஆண்டுடன் ஒப்பிடும் போது  2 மில்லியன் ரூபா கூடுதலாக இம்முறை சேகரிக்கப்பட்டதாகவும்   இவ்வருடம் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 1,420,572 ரூபாவினை சேகரித்த முதலாமிடத்தையும்  வெல்லாவெளி பிரதேச செயலகம் 1,139,945 ரூபாவினை சேகரித்து இரண்டாமிடத்தினையும், செங்கலடி பிரதேச செயலகம் 726,666 ரூபாவினை சேகரித்த மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர் இக்கொடி விற்பனையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்கங்கள், சமுர்த்தி சிறுகுழுக்கள், சமுர்த்தி மகா சங்க பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஈடுபட்டிருந்தனர். இதில் சேகரிக்கப்படும் நிதி சிசுதிரிய புலமைப்பரிசில் மற்றும் சமுர்த்தி திரியபியச வீட்டுக்கான கொடுப்பணவு உட்பட சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுமெனவும் சமுர்த்தி மாவட்ட பிரதிப்பணிப்பாளர் P.குணரட்னம் தெரிவித்தார்.

தொடரும்.......
















Comments