நானும் என் சமுர்த்தியும் 92ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 92ம் தொடர்.......

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்ட அரச அதிபராக  முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றிய திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் அவர்கள் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய சுந்தரம்  அருமைநாயகம் அவர்கள்  யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

24.05.2012 அன்று கல்லடி வேலூர் சிறி சக்தி வித்தியாலத்தில் சித்திரை புத்தாண்டு சேமிப்பில் அதிக சேமிப்பு செய்தோருக்கு கௌரவிப்பு நிகழ்வை நடாத்த ஏற்பாடு செய்து கொண்டேன். இந்நிகழ்வுக்கு மண்முனை வடக்கின் புதிய பிரதேச செயலாளராக கடமையேற்ற பின் முதல் தடவையாக S.கிரிதரன் அவர்கள் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.


இந்நிகழ்வில் திரியபியச வீட்டிற்காக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிக்கு கொடுப்பணவு வழங்கப்பட்டதுடன், சிப்தொர புலமை பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பணவும் வழங்கப்பட்டதுடன், திசுதிரிய புலமை பரிசிலுக்கான கொடுப்பணவும் வழங்கப்பட்டதுடன், 2011ம் ஆண்டு நாடகப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்ற சிறார்களுக்கான காசோலை வழங்கப்பட்டது, அத்துடன் 2012ம் ஆண்டு சித்திரை புது வருடத்தில் அதிகம் சேமிப்பை செய்த சமுர்த்தி பயனாளிகளுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது. இதன் போது சமுர்த்தி வினாவிடை போட்டியில் முதலிடத்தை பெற்ற கல்லடிவேலூர் லட்சுமி சமுர்த்தி சங்கத்திற்கு நினைவு பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்ற குறுநாடகம், தனிப்பாடலில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் சிறப்பான சேவையினை வழங்கிய சௌந்தரராணி சுகுமாரன் கௌரவிக்கப்பட்டதுடன் ஏராளமான பரிசு குவியல்கள் சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும், மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், கல்லடி வலய சமுர்த்தி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும், புளியந்தீவு வலய சமுர்த்தி முகாமையாளர் K.நவரஞ்சன் அவர்களும், சிறி சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்சோதி அவர்களும், கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் A.தேவதாஸ் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை எனது நண்பரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான N.ரவீந்திரகுமார் அவர்கள் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மே 31 புகைத்தல் எதிர்ப்பு வாரம் அதை சிறப்பாக நடாத்த வேண்டும் என்று 24ம் திகதியே முடிவெடுத்து இருந்தேன்.

தொடரும்.....













Comments