நானும் என் சமுர்த்தியும் 91ம் தொடர்.......
இதற்கிடையில் சமுர்த்தி வங்கி தமது வட்டி வீதத்தை அறிவித்து இருந்தது. வறியவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் சமுர்த்தி வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு மிக சிறப்பாக சேவையாற்றி வந்தன. சமுர்த்தி வங்கிகள் மூலம் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறு சுயதொழில் முயற்சிகளுக்கான கடனாக ரூபா 10000.00 தொடக்கம் ரூபா 250000.00 வரை சமுர்த்தி பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டு வந்தன. இக்கடன்களுக்கான வட்டி வீதம் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு 18% இருந்தது. இந்த வட்டி வீதத்தை சமுர்த்தி வங்கி குறைத்துள்ளதாக அறிவித்திருந்தது. சமுர்த்தி நிவாரன அட்டை பெறும் சமுர்த்தி பயனாளிகளுக்கு 8% வீதமாகவும், சமுர்த்தி பெற தகுதியுடைய பயனுகரிகளுக்கு 10% அறவிடப்படுப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இது ஒரு பாரிய மாற்றமாக பலரும் கருதி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலக்த்தில் முதல் தடவையாக இங்கு செயற்படும் 4 சமுர்த்தி வங்கிகளும் 2011ம் ஆண்டிற்கான இலாபத்தை அடைந்துள்ளதால் இவ்வங்கிகளில் பங்குகளை கொள்வணவு செய்த சமுர்த்தி பயனுகரிகளுக்கு பங்கு இலாபங்களை வழங்குவதற்கான பணிகளை நான்கு சமுர்த்தி வங்கிகளும் முதல் தடவையாக வழங்க நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளரும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளருமான K.கணேசமூர்த்தி அவர்கள் அறிவித்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு வரவு செலவுப் பிரேரணையின் பிரகாரம் சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இதுவரை செயற்படுத்தப்பட்டு வந்த முத்திரை முறைக்குப் பதிலாக சமுர்த்திப் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவிலிடப்படும் முறை 2012 ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பின்வருமாறு சமுர்த்தி நிவாரணம் மாற்றம் பெற்றது. மொத்தமாக வழங்கப்படும் தொகையில் இருந்து கட்டாய சேமிப்பு, சமூக பாதுகாப்பு காப்புறுதி, வீட்டு லொட்டறி போன்றவற்றிக்கு கொடுப்பணவில் இருந்து கழிக்கப்பட்ட மிகுதிப்பணம் சமுர்த்தி வங்கியால் உரிய சமுர்த்தி பயனாளிக்கு வழங்கப்படும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதன் போது சமுர்த்தி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டோருக்கு 210 நிவாரணமாக வழங்கப்பட்டதுடன் சமுர்த்தி வங்கியால் அவர்களுக்கு கொடுப்பணவு வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது. இதன் விபரம் பின்வருமாறு
அங்கத்தவர் எண்ணிக்கை |
வழங்கப்படும் கொடுப்பணவின் விபரம் |
||||
|
மொத்தமாக வழங்கப்படும் நிவாரணம் |
fl;lha Nrkpg;G |
r%f ghJfhg;G epjpak; |
tPl;L nyhl;lwp |
rKh;j;jp tq;fpapy; gadhspf;F toq;fg;gLtJ |
4 நபருக்கு மேல் |
1,500 |
300 |
45 |
10 |
1>145 |
3 நபர்களுக்கு |
1,200 |
200 |
45 |
10 |
945 |
3 நபர்களுக்கு கீழ் |
750 |
100 |
45 |
10 |
595 |
மேம்படுத்தப்பட்டோர் |
210 |
155 |
45 |
10 |
00 |
இது மாத்திரமன்றி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் கல்லடி வேலூர் கிராமம் முதலிடத்தை பெற்று முன்மாதிரி கிராமமாக திகழ்ந்தது. இதன் போது அதிக சேமிப்பு செய்பவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும் என நான் அறிவித்திருந்தேன் அப்பரிசில்களை வழங்கி கல்லடிவேலூர் கிராம மக்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக 2012 சித்திரை புதுவருட கௌரவிப்பும் பரிசளிப்பு நிகழ்வும் எனும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தேன் வருவது புகைத்தல் எதிர்ப்பு சேமிப்பு மக்களை கொஞ்சம் ஊக்கப்படுத்துவதற்கு இந்நிகழ்வு உதவும் என எண்ணி சமுர்த்தி ஒன்றியத்திடம் நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு கூறி இருந்தேன்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரியதொரு மாற்றம் நிகழ்ந்தது அது என்னவென்று அடுத்துவரும் தொடரில் பார்ப்போம்.......
தொடரும்..
Comments
Post a Comment