நாட்களின் ஓட்டம் நகர 2011ம் ஆண்டு நடாத்தப்பட வேண்டிய பிரதேச செயலக ஒன்று கூடலை நடாத்த பிரதேச செயலக பதவியணியினர் முடிவெடுத்தனர் கடந்த முறை பாசிக்குடா சென்றோம் இம்முறையும் வெளியிடத்திற்கு செல்வது தான் சிறந்தது என முடிவெட்டப்பட்டு வாகரை பிரதேச செயலகத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. வழமை போன்று சமுர்த்தி படையணி ஒன்று வெளிக்கிட்டது. நானும் ரவீந்திரகுமாரும் சில நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அங்கு போனாலும் நாம் தான் முத்திரை பதிப்போம் அதனால் பிரதேச செயலகத்தில் எமக்கு அபிமானிகள் கூட இருந்தனர். என் வாழ்நாளில் முதல் தடவையாக வாகரை பிரதேச செயலகத்திற்கு சென்றிருந்தேன் இனிதான நிகழ்வாக இருந்தது அன்றைய நாள்.
கணணி மயமாக்கள் வேலைத்திட்டம் மும்முரமாக நடைபெற கிழக்கு மாகானத்திற்கான மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்களுக்கான கணணி மயமாக்கல் விழிப்பூட்டும் கருத்தரங்கு மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி பணிப்பாளர் P.குணரட்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் M.நடேசராஜா, அம்பாரை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் சுதர்சன குணசேகர, அம்பாரை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் I.அலியார், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் J.F.மனோகிதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் 2011ம் ஆண்டிற்கான சிறுவர் தின போட்டியில் கல்லடிவேலூர் கிராமம் சார்பாக இரண்டு நிகழ்வுகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சென்றிருந்தது. இதில் தனிப்பாடல் போட்டியில் மூன்றாமிடத்தினையும், குழு நாடகப் போட்டியில் கலந்து கொண்டோர் இரண்டாமிடத்தினையும் தட்டிச் சென்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கல்லடி வேலூர் கிராமம் தேசிய மட்டத்திற்கு சென்று முதல் மூன்று இடங்களுக்குள் ஒரு நிகழ்வாவது வருவது எனக்கு பெருமையாக இருந்தது. நான் கல்லடி வேலூர் கிராமத்தை பொறுப்பேற்ற போது ஒரு நிகழ்வு கூட வலய மட்டத்தில் தெரிவு செய்யப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மீண்டுமொரு முறை புளியந்தீவு சமுர்த்தி வங்கியை எல்லோரும் திரும்பி பார்க்கும் வன்னம் இவ்வங்கியின் இளம் துடிப்புள்ள சமுர்த்தி முகாமையாளர் K.நவரஞ்சன் அவர்கள் செய்திருந்தார். அது தான் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கணணி மயமாக்கப்பட்ட வங்கியாக புளியந்தீவு சமுர்த்தி வங்கி முதல் முதலாக திறந்து வைக்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் அதற்கான அத்தனை பணிகளையும் செய்து முடித்திருந்தார் புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.நவரஞ்சன் அவர்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட வங்கி பணியாளர்களுக்கும், கள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் இன்றும் நாம் வாழ்த்துக்களை கூற கடமைப்பட்டுள்ளோம்.
12.03.2021 அன்று புளியந்தீவு சமுர்த்தி வங்கி கணணி மயமாக்கப்பட்டு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும், புளியந்தீவு சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தான் எம் காதுகளில் ஒரு செய்தி எட்டியது அது என்ன வென்று அடுத்த தொடரில் பார்ப்போம்..........
Comments
Post a Comment