நானும் என் சமுர்த்தியும் 87ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 87ம் தொடர்.......


கடந்த வருடம் சகல சமுர்த்தி வங்கிகளும் கணணி மயமாக்கபப்ட வேண்டும் என்பதற்காக நவம்பர் மாதத்தில் மட்டக்களப்பிற்கான ஒரு விஜயத்தை இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்கள் மேற் கொண்டு கல்லடி சமுர்த்தி வங்கியை பார்வையிட்டதை நாம் அறிந்திருந்தோம். 

கணணி மயமாக்கலுக்கான பணிகள் பல சமுர்த்தி வங்கிகளில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 24.01.2012 அன்று வாழைச்சேனை சமுர்த்தி வங்கியை மட்டக்களப்பு மாவட்டத்தில  முதல் கணணி மயமாக்கும் வேலைத்திட்டத்தை அன்றைய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பணிப்பாளர் M.நடேசராசா மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் P.குணரட்னம் சமுர்த்தி  அதிகார சபையின் வங்கி நடவடிக்கைக்கான முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

இதன் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்கள சட்டம் தொடர்பாக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமும் இடம்பெற்றது. சமுர்த்தி அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உடரட்ட அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அபிவிருத்தி சபைகளை ஒன்றிணைப்பதன் ஊடாக திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் புதிய திணைக்களத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் திவிநெகும அடிப்படை சமுதாய அமைப்புக்களை அமைப்பதுடன் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் ஒருங்கணைப்புத் தொகுதி ஒன்றினை கட்டியெழுப்புதவற்கும் திவிநெகும அடிப்படை சமுதாய வங்கியினை உருவாக்குவதற்கும் ஒழுங்குகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்றும் வறுமை நிலையினை அகற்ற வாழ்வாதார அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துதல், உணவுப்பாதுக்காப்பினை உறுதிப்படுத்துதல், தேசிய அபிவிருத்தியினை விரைவுபடுத்துதல், குறுநிதியியல் வசதிகளை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மனித மூலதன அபிவிருத்தி, மற்றும் சமூக பாதுக்காப்பு வலையமைப்புக்களை உருவாக்குவதும் புதிய திணைக்களத்தின் குறிக்கோள்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.  25,000த்திற்கு மேற்பட்டசமுர்த்தி ஊழியர்களின் தொழில் பாதுகாப்பினை வழங்குவதற்கும் புதிய திணைக்களம் வழிசமைக்கும். புதிய திணைக்களத்தினை ஆரம்பிப்பதற்குரிய மேற்படி விபரங்கள் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் சகல மாவட்டங்களிலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது, ஆகையினால் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே வேளை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கல்லடி சமுர்த்தி வங்கியும், புளியந்தீவு சமுர்த்தி வங்கியும் கணணி மயமாக்கும் வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யபப்ட்டதால் இப்பணிகளில் கல்லடி வங்கி மும்முரமாக செயற்படத் தொடங்கியது. இதற்காக கல்லடி சமுர்த்தி வங்கியில் உள்ள சகல கிராமங்களிலும் கிராமத்தின் தகவல்களை திரட்டி வங்கியில் சமர்ப்பிற்கும் படி கூறப்பட்டது. நானும் கல்லடி வேலூர் கிராமத்தின் தகவல்களை சேகரித்து வங்கியில் சமர்பித்துக் கொண்டிருந்தேன்.

தொடரும்........


Comments