நானும் என் சமுர்த்தியும் 86ம் தொடர்.......
2012ம் ஆண்டிற்கான வேலைத்திட்டத்தில் செயற்பட தொடங்கினேன். முதல் நிகழ்வாக 2011ம் ஆண்டு செயற்பட்ட ஒன்பது சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களை ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் அழைத்து தங்கள் சேவைக்காக சிறு ஒன்றுகூடலை நடாத்தி பரிசில்கள் வழங்கினேன் அப்போது தான் 2012ல் சங்க தலைவிகளை சிறப்பாக வழி நடத்த முடியும் எனும் நோக்கில் செயல்பட்டேன்.
மீண்டும் தைப்பொங்கல் சேமிப்பு ஆரம்பமானது சங்க தலைவர்களை போட்டியாக செயற்படுத்தி சேமிப்பை ஆரம்பித்தேன். ஒரு சங்கம் 20000 ரூபாவிற்கு மேல் சேமித்தால நினைவுச்சின்னம் என்றும் குழுவில் 1000 ரூபாவிற்கு மேல் சேமித்தால் பரிசு என்றும், பங்கில் 5000 ரூபாவிற்கு மேல் சேமித்தால் பரிசு என்றும், சிறுவர் கணக்கில் 5000 சேமித்தால் பரிசும் என அறிவித்தேன் சங்க தலைவர்கள் தம் சிறப்பான பங்களிப்பை செய்து பிரதேச செயலக மட்டத்தில் கல்லவேலூர் கிராமம் முதலிடம் பெற உதவினர்.
கல்லடி வேலூர் கிராமம் 2,69,000 ரூபாக்கை சேமித்து மூன்றாவது தடவையாக தைப்பொங்கல் சேமிப்பில் பிரதேச செயலக மட்டத்தில் முதலிடத்தை பெற்று ஹட்றிக் சாதனை படைத்தது. 2012ம் ஆண்டு கல்லடி வேலூர் கிராமத்தில் தைப்பொங்கல் வாரத்தில் அதிக சேமிப்பான 76000 ரூபாக்களை சேமித்து காயத்திரி சமுர்த்தி சங்கம் முதலிடத்தினையும், அலைமகள் சமுர்த்தி சங்கம் இரண்டாமிடத்தினையும், சரஸ்வதி சமுர்த்தி சங்கம் மூன்றாமிடத்தினையும், லட்சுமி சமுர்த்தி சங்கம் நான்காமிடத்தினையும், சக்தி சமுர்த்தி சங்கம் ஐந்தாமிடத்தினையும், அபஹாமியா சமுர்த்தி சங்கம் ஆறாமிடத்தினையும் பெற்றுக் கொள்ள இவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இப்பரில்கள் அனைத்தையும் கல்லடி வேலூர் சமுர்த்தி ஒன்றியமே வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதிக சேமிப்பு செய்த சமுர்த்தி பயனாளிகளுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது.தொடரும்.......
Comments
Post a Comment