நானும் என் சமுர்த்தியும் 84ம் தொடர்.......
2011ம் ஆண்டு மிகச் சிறப்பாக என் சமுர்த்தி சங்கங்கள் செயற்பட்டன அதற்கு மிக முக்கிய காரணமாக கல்லடி வேலூர் கிராமத்தின் சமுர்த்தி தாய்சங்கம் செயற்பட்டது தான். இதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தாய் சங்க தலைவி ம.தங்கேஸ்வரி அவர்களுக்கும் தாய்சங்கத்தின் பொருளாளர் சி.இராஜகுமாரி அவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆடி ஓடி களைத்த கால்களை ஒரு இடத்தில் அமர வைத்து பார்ப்பதற்காக வருடாந்தம் ஒன்று கூடலை ஏற்பாடு செய்தோம் விரும்பியவர்களை கலந்து கொள்ளுமாறும், அதிலும் குடும்பமாக இணைந்து கொள்பவர்களும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 50 மேற்பட்டவர்களுடன் நாவலடியில் ஒரு நாள் பயணமாக செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.
நாளை போவது என்று முடிவு எட்டப்பட்ட போது அன்று இரவு பெரும் மழை பெய்யத் தொடங்கி விட்டது. இரவோடு இரவாக எல்லோரும் நாளை போவதா? என கேட்டபடி இருந்தனர். நான் சொன்னேன் நீங்கள் பட்ட கஸ்டம் எனக்கு தெரியும் நிச்சயமாக நாளை மழை பெய்யாது பெய்தாலும் பயணம் தொடரும் என்றேன். நான் கூறிய படி மழை பெய்யவில்லை அனைவருடனும் சந்தோசமாக நாவலடி பயனித்தோம். அங்கே இருந்த பொதுக்கட்டிடம் ஒன்றை அங்குள்ள தலைவர் ஊடாக பெற்றுக் கொண்டு நிகழ்வுகளை நடாத்தினோம்
காலை 10 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மதியம் வரை தொடர்ந்தது எனது மக்களே தாம் வீடுகளில் சமைத்து வந்த உணவை அருந்தி விட்டு மீண்டும் விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள். பெரும் பாலும் வந்த அனைவரும் பரிசில்களை பெற்றுக் கொள்ள சிறுவர்களுக்கும் பரிசில்கள் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சி. முக்கிய நிகழ்வாக 2011ம் ஆண்டு தம் சேவையை அர்பணிப்புடன் செயற்பட்ட சமுர்த்தி தாய் சங்கத்தின் தலைவி ம.தங்கேஸ்வரி அவர்களையும் பொருளாளர் சி.இராஜகுமாரி அவர்களையும் மக்கள் சிறப்பாக கௌரவித்திருந்தனர்.
இவ்வாறு 2011ம் ஆண்டு முடிவுக்கு வந்தது இவ்வாண்டில் நான் திட்டமிட்டவாறு சிறுவர் நிகழ்வு, முதியவர் நிகழ்வு, மகளிர் நிகழ்வு, நவராத்திரி நிகழ்வு, ஒளிவிழா நிகழ்வு, கௌரவிப்பு நிகழ்வு, சித்திரை சேமிப்பு, தைப்பொங்கல் சேமிப்பு, புலமை பரீட்சை கருத்தரங்கு, சுற்றுலா, சங்கங்களின் கௌரவிப்பு போன்ற நிகழ்வுகளை நடாத்தி மகிழ்ச்சியடைந்தேன் அடுத்து 2012ல் இன்னும் சிறப்பாக செயற்பட வேண்டும் என நினைத்து 2011.12.31ல் கண்ணயர்ந்தேன்.
தொடரும்.....
Comments
Post a Comment