நானும் என் சமுர்த்தியும் 83ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 83ம் தொடர்.......

 மிகவும் மகிழ்சியாக நடைபெற்ற கரோல் கீதப்போட்டியில் துர்க்கா சமுர்த்தி சங்கம் முதலிடத்தை பெற்றதாக பிரதம நடுவர் X.I.ரஜீவன் அடிகளார் தெரிவித்தார். உடனே இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்தார். இவ்வருடம் மாவட்ட செயலக ஒளிவிழாவில் கல்லடிவேலூர் கிராமத்தில் இருந்து கரோல் கீதத்தில் முதலிடத்தை பெற்ற துர்க்கா சமுர்த்தி சங்கம் கலந்து கொள்ளும் எனும் சந்தோசகரமான செய்தியை தெரிவித்தார்.



கரோல் கீத நிகழ்வு முடிவடைந்ததுடன் கௌரவிப்பு மற்றும் ஒளிவிழாவை நடாத்த தீர்மானித்து நடாத்த சமுர்த்தி தாய் சங்கம் மும்முரமாக செயற்பட்டது. 2011ம் ஆண்டு சிறப்பாக செயற்பட்ட சங்கம், தலைவி, செயலாளர், பொருளாளர், சிறப்பாக செயற்பட்ட குழுக்கள், சங்க கூட்டத்திற்கு ஒழுங்காக வருகை தந்தோர், சிறப்பான முறையில் சமுர்த்தி வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை செலுத்தியவர்கள் போன்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும், மண்முனை வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.டேவிட் அவர்களும், பாஸ்டர்  குணசேகரம் அவர்களும் இந்நிகழ்வுக்கு அனுசரனை வழங்கிய சிலோன் சொய்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் இ.ரஜீவ்குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களுக்கு நத்தார் தாத்தாவின் தொப்பிகள் அணிவித்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் சிறுவர்களின் நிகழ்வுகளும், பாலன் பிறப்பு நிகழ்வும் தத்துருவமாக செய்து காட்டப்பட்டதுடன் கரோல் பாடல் நிகழ்வில் முதலிடம் பெற்ற துர்க்கா சமுர்த்தி சங்கத்தின் கரோல் கீதமும் இடம் பெற்றது.

2011ம் ஆண்டு சிறந்த சங்கமாக காயத்திரி சமுர்த்தி சங்கமும், சிறந்த தலைவியாக அலைமகள் சமுர்த்தி சங்கத்தின் தலைவியான நா.தாட்சாயினி அவர்களும், சிறந்த பொருளாளராக லட்சுமி சமுர்த்தி சங்கம் சார்பாக நிர்மதி அவர்களும். சிறந்த பொருளாளராக துர்க்கா சமுர்த்தி சங்கம் சார்பாக வி.சுதாசினி அவர்களும் சிறந்த அதிக சேமிப்பு செய்த குழுவாக லட்சுமி சமுர்த்தி சங்கத்தின் பேச்சியம்மன் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

 இதன் போது சமுர்த்தி தாய் சங்கத்தை 2011ல் சிறப்பாக வழிநடத்தி செய்றமைக்காக ம.தங்கேஸ்வரி அவர்களையும் த.இராஜகுமாரி அவர்களையும் மக்கள் கௌரவப்படுத்தி இருந்தனர். மற்றும் பாடசாலை செல்லும் வறிய மாணவர்களுக்கு சிலோன் சொயிஸ் நிறுவனத்தின் ஊடாக அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சி இறுதியில் நத்தார் தாத்தா வருகை தந்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி ஆடல் பாடலில் சிறுவர்களை மகிழ்வித்தார். மட்டில்லாத மகிழ்ச்சியில் நான் அன்றைய தினத்தை கழித்தேன்.

சமுர்த்தி திட்டம் செயற்படுத்த நினைத்த ஒவ்வொன்றையும் செய்யத் துணிந்தேன் எனக்கு உறுதுணையாக என் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

தொடரும்........



















Comments