நானும் என் சமுர்த்தியும் 81ம் தொடர்.......
நவம்பர் மாதம் நகர்ந்த படி இருக்க 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனாளிகளில் வீட்டு லொத்தர் மூலம் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகையினை வழங்கும் நிகழ்வு மிகப் பிரம்மான்டமாக நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் P.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகத்தில் இருந்தும் வெற்றி பெற்ற சமுர்த்தி பயனாளிகள் வருகை தந்திருந்தனர்.
சமுர்த்தியின் மற்றுமொரு பிரதான இலக்கான வீடற்றோருக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தில், சமுர்த்தி நிவாரனம் பெறும் சமுர்த்தி பயனுகரிகளின் நிவாரனத்தில் இருந்து வீடடிற்கான அதிஸ்டலாப சீட்டிலுப்புக்கென மாதாந்தம் 10 ரூபாய் அறவிடப்பட்டு அதிஸ்டலாப சீட்டிலுப்பில் வெற்றிபெறும் சமுர்த்தி அதிஸ்டசாலிக்கு ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. சமுர்த்தி பயனுகரி அப்பணத்தில் வீடு அமைத்துக் கொள்ள அல்லது காணி கொள்வணவு செய்ய அல்லது வீட்டை திருத்தி அமைத்துக் கொள்ள இப்பணத்தை பயன்படுத்த முடியும். மேற் கூறப்பட்ட மூன்றும் விடயங்களையும் சமுர்த்தி பயனுகரி நிறைவேற்றி இருந்தால் அவர்களது தொழில் முயற்சிக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
இவ் அதிஸ்டலாப சீட்டிலுப்பு வீட்டு வேலைத்திட்டம் அக்காலத்தில் நாடுபூராகவும் பொதுவான முறையில் குலுக்கப்பட்டு அதிஸ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டனர் இதனால் சில சமயங்களில் மாவட்டத்திற்கே வீடுகளுக்கான அதிஸ்டலாப சீட்டிலுப்பில் வீடுகள் கிடைக்காமல் போகும். ஆனால் இப்போது பிரதேச செயலகம் வாரியாக குலுக்கப்பட்டு கட்டாயம் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு வீடு கிடைக்கும் வண்ணம் இவ்வதிஸ்டலாப சீட்டிலுப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இதை தவிர சமுர்த்தி திணைக்களத்தின் மூலம் தற்போது சௌபாக்கியா ஆறுலட்சம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதுடன், சௌபாக்கியா இரண்டுலட்சம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதுடன், திரியபிய வீட்டுத்திட்டத்தின் மூலமும் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகளில் சமுர்த்தி திணைக்களம் தற்போதும் செயற்பட்டு வருகின்றதை பெருமையுடன் அறியத்தருகின்றேன்.
இந்நிகழ்வுக்கு சமுர்த்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திற்கான பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும் மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள், சமுர்த்தி பயனுகரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடரும்.....
Comments
Post a Comment