நானும் என் சமுர்த்தியும் 80ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 80ம் தொடர்.......

2011 கண்காட்சி முடிந்த இரவு ஒரு பரபரப்பான செய்தி உலாவியது எம்மை ஓய்வூதிய திட்டத்திற்குள் உள்வாங்க போகிறார்களாம் சமுர்த்தி அதிகார சபை சமுர்த்தி திணைக்களமாக மாறப் போகுதாம். வேலையில் இருந்து விலகுவோர் விலகலாமாம் என பல கதைகள் வரத்தொடங்கின. இதற்கான ஒரு கூட்டம் நாளை 05.11.2011 அன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடக்க வுள்ளதாகவும்  அறிவுருத்தப்பட்டது. எமக்கும் சந்தோசம் தான் ஓய்வூதியம் கிடைக்கப் போகின்றதே என்று.

 மறுநாள் காலையில் மாநகர சபை கட்டிடத்திற்கு சென்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல சமுர்த்தி முகாமையாளர்களும், சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர். இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்சினி பெர்ணான்டோ பிள்ளை அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் இங்கு உரையாற்றுகையில் சமுர்த்தி  உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அவர்களை திவிநெகும கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்து தன் உரையை தொடர்ந்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக தேர்தல் தொகுதிகள் தோறும் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களை திணைக்களத்தின் கீழ் உள் வாங்கி அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடவே நான் இங்கு வந்துள்ளேன் என்றார் தொடர்ந்து உரையாற்றுகையில் 

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தற்போது சமுர்த்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றுகின்றனர். இவர்களை சமுர்த்தி திவிநெகும திணைக்களத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் அவர்களின் ஆலோசனையின் பேரில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமையப் பெறவுள்ள  திணைக்களத்தின் கீழ் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கொண்டு வரப்பட்டவுடன்  அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்குதல் தொடர்பில் மூன்று வகையான மும்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

1.சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற காலத்தை கணக்கிட்டு அவர்கள் மற்றும் அவர்களது மனைவி, பிள்ளைகள் ஓய்வூதியம் பெறும் வகையிலான ஓய்வூதியம் வழங்குதல். 

2.சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கிவரும் ஊழியர் சேமலாப நிதிக்கான பங்களிப்பை முழுத்தொகையாகவும் பெறும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் நியமனம் பெறும் அன்றிலிருந்து சேவைக்குள் உள் வாங்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். 

3.சேவையிலிருந்து முற்றாக நிற்க விரும்பும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இழப்பீட்டு  கொடுப்பனவை  வழங்குதல்.

 ஆகிய மூன்று மும்மொழிவுகள் இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன

சமுர்த்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திணைக்களத்தின் கீழ் கொண்டு வந்தவுடன் அவர்களுக்கு தற்போது மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களோடு இன்னும் சில வேலைகளும் பொறுப்புக்களும் வழங்கப்படும். இது சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும் என அவர்  மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் அருண்  தம்பிமுத்து மற்றும் ஏறாவூர் அமைப்பாளரும் ஏறாவூர் நகர சபை தலைவருமான அலிசாகீர் மௌலான மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காலையில் தொடங்கிய கூட்டம் மதியம் தாண்டிச் சென்றது எமக்கு மகிழ்ச்சி தான் எந்த தெரிவை தெரிவு செய்வது என்று எல்லோருக்கும் பதற்றம் சிலர் கூறினார்கள் தாங்கள் வேலையில் இருந்து நிக்கப் போவதாகவும், சிலர் கூறினார்கள் ஆரம்பத்தில் இருந்து தொடரப் போவதாகவும் கூற நான் கூறினேன் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொண்டு புதிதாக உள்வாங்கப் போவதாக கூறினேன்.

தொடரும்.......





Comments