நானும் என் சமுர்த்தியும் 79ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 79ம் தொடர்.......



2011ல் சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சி......



கடந்த வருடம் மிகவும் பிரம்மாண்டமாக நடாத்தப்பட்ட சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சியைப் போன்று 2011ம் ஆண்டும் சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சியை சிறப்பாக நடாத்த வேண்டும் என மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்கள் முடிவெடுத்து மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தி செயற்படுத்தினார். இவர்களுடன் மாவட்ட செயலகத்திற்கு அன்டியதாக காணப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவியையும் பெறுவதாகவும் முடிவெடுக்கப்பட்டது. கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் இந்துக்கல்லூரி மைதானத்தில் நவம்பர் மாதம் 03ம்,  4ம் திகதிகளில்  நடாத்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது 

இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் அனுசரனையுடன் 03.11.2011 முதல் நிகழ்வு ஆரம்பமானது. முதல் நாள் நிகழ்வில்  அப்போதைய கிழக்கு மாகானசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட கணக்காளர் S.நேசராஜா அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும் சமுர்த்தி வாழ்வாதார பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடமாகும். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இருந்தும் சமுர்த்தி பயாளிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் அவர்களும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான M.S.S. அமீர் அலி அவர்களும் மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை பார்வையிட்டதுடன் வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைத்தனர். இத்துடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஆட்டோ வண்டி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

அன்றைய தினம் மாலைப் பொழுதில் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்கள் வருகை தந்து உற்பத்தி கண்காட்சியை பார்வையிட்டார். இதன் போது புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.நவரஞ்சன் தலைமையில் தங்கள் வங்கி நடவடிக்கையை இக்கண்காட்சியில் செயற்படுத்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது சிறுவர், திரியமாதா, அங்கத்தவர் அல்லாதோர் கணக்குகள் சமுர்த்தி வங்கியால் ஆரம்பிக்கப்பட்டு பணிப்பாளர் நாயகத்தால் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களின் நெறியாள்கையில் சிறப்பாக நடைபெற்றதுடன் இதற்காக செயற்பட்ட மாவட்ட செயலக சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் மற்றும் மாவட்ட கருத்திட்ட முகாமையாளர் A.M.அலி அக்பர் மற்றும் கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் அவர்களுக்கும் சமுர்த்தி முகாமையாளர்கள், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடரும்......






















Comments