நானும் என் சமுர்த்தியும் 78ம் தொடர்.......
2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முழுவதும் சிறுவர் முதியோர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் மாவட்ட சமுர்த்தி பிரிவும் இனைந்து சிறுவர் முதியோர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு இந்து கலாச்சார மண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அப்போதைய கிழக்கு மாகான முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும் விசேட அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது தேன் சிட்டு எனும் நூல் அன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் போது சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் சிறுவர் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதன் போது நிகழ்வில் கலந்து கொண்ட முதியோருக்கும் விசேட பரிசில்களும், உதவிகளும் வழங்கப்பட்டன. நானும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கல்லடி வேலூர் கிராமத்தில் பணியாற்றியமைக்காக இந்நிகழ்வுக்கு சென்றிருந்தேன் அப்போது எனது புகைப்பட கருவியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சுமார் 10 வருடங்களுக்கு பின் உங்கள் பார்வைக்காக வெளியிடுகின்றேன்.
தொடரும்........
Comments
Post a Comment